Tuesday 18 October 2011

பிரெசாலுவிலுள்ள டபிள்யூ. போர்கியசுக்கு: பி. ஏங்கல்ஸ்


 
பிரெசாலுவிலுள்ள
டபிள்யூ. போர்கியசுக்கு
(To W.Borgius in Bresalu)*
பி. ஏங்கல்ஸ்
இலண்டன், ஜனவரி 25, 1884

அன்புள்ள ஐயா,
உங்களுடைய கேள்விக்கான விடை இதோ:

1.பொருளியல் உறவுகளையே நாம் சமுதாய வரலாற்றின் தீர்மானமான அடித்தளமாகக் கருதுகின்றோம். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றையும் மனிதர்கள் உற்பத்தி செய்யும் முறையையும், (வேலைப்பிரிவினை நிலவுகிற காலம் வரையிலும்) உற்பத்திப் பொருள்களை (பரிவர்த்தனை) பரிமாற்றம் செய்து கொள்கிற முறையையும் பொருளியல் உறவுகள் என்று நாம் புரிந்து கொள்கிறோம். எனவே, அவை உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தொழில் நுணுக்கம் முழுவதையுமே உள்ளடக்கும். நமது கருத்துப்படி, இந்தத் தொழில் நுணுக்கம் பரிமாற்ற முறையையும், அதற்கும் மேலாக உற்பத்திப் பொருள்களின் பகிர்வு முறையையும், எனவே, இந்தப் பிடிமானமுடைய சமுதாயம் கலைக்கப்பட்ட பிறகு, வர்க்கப் பிரிவினையையும், இதன் விளைவாகப் பிரபுத்துவம் மற்றும் அடிமை உறவுகளையும், முடிவில் அரசு, அரசியல், சட்டம் ஆகியவற்றையும் இந்த தொழில் நுணுக்கம் தீர்மானிக்கிறது. பொருளியில் உறவுகள் புவியியல் அடிப்படையையும் உள்ளடக்கும்; புவியியல் அடிப்படையில் தான் அவை தொழிற்படுகின்றன. பொருளியல் உறவுகள் மரபின் விளைவாகவோ கடமையினாலோ கடந்த காலத்திலிருந்து ஊடனுப்பி வரப் பெற்ற (Transmitted)  வையும் தாக்குப் பிடித்து நிற்கக் கூடியவையுமான பொருளியல் மேம்பாடுகளின் தொடக்கக் காலகட்ட மிச்சமீதங்களையும் உள்ளடக்கும்; இந்த சமுதாய அமைப்பைச் சுற்றிச் சூழ்ந்துள்ள புறவயச் சுற்றுச் சூழலையும் கூட பொருளியல் உறவுகள் உள்ளடக்கும்.
*இதற்கு ரோக்ளா (Wroclaw) என்பது போலிக்ஷ் பெயர்.தொகுப்பாசிரியர்

நீங்கள் சொல்லுகிறபடி, தொழில் நுணுக்கம் அறிவியல் நிலையைப் பொறுத்தது என்றால், அறிவியல் அரசையும் தொழில் நுணுக்கத்தின் தேவைகளையும் (Requirments) இன்னும் மேலதிகமாகச் சார்ந்துள்ளது. சமுதாயத்துக்கு ஓர் அறிவியல் தேவையிருக்குமானால், “அத்தேவை பத்துக்கும் மேற்பட்டால் பல் கலைக் கழகங்கள் செய்வதை விட அதிகமாக அறிவியலை முன்னேற்றுகிறது. நீர்ம நிலையியல் (Hydrostatics) (Toricelli, etc) முழுவதுமே பதினாறாவது, பதினேழாவது நூற்றாண்டுகளில் இத்தாலியிலுள்ள நீரோடைகளை ஒழுங்குபடுத்தும் தேவையை ஒட்டி எழுந்ததாகும். மின்னியல் தொழில் நுணுக்கப்பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் அதைப்பற்றி பகுத்தறிவுள்ளவற்றை நாம் அறிந்தோம். ஆனால் துரதிக்ஷ்டவசமாக  அறிவியல்கள் யாவும் ஏதோ வானத்திலிருந்து விழுந்தவை போல அறிவியல் வரலாறு எழுதுவதே ஜெர்மனியில் வழக்கமாகிப் போய்விட்டது.
 
2. வரலாற்று மேம்பாட்டை இறுதியில் தீர்மானிக்கின்றவையாக நாம் பொருளியல் (Conditions) நிலைமைகளைக் கருதுகிறோம். ஆனால் பந்தயம் என்பது ஒரு பொருளியல் காரணியேயாகும். எனினும் இதனுடன் சேர்ந்து இரண்டு விக்ஷயங்களைக் காணத் தவறக் கூடாது.

(அ) அரசியல், சட்ட, மெய்யியல், சமய, படிப்பறிவு, கலையியல்…… போன்றவற்றின் வளர்ச்சி பொருளியல் வளர்ச்சியின் மேல் அமைவதாகும். பொருளியல் நிலைமை (Situation) தான் காரணமும் முற்றமுழுக்கச் செயலூக்கமுள்ளது எனவும் மற்றவை யாவும் செயலற்றவை என்றும் ஒருவர் நினைக்கக் கூடும், அதற்கு மாறாக இறுதியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிற (Asserts - உறுதிப்படுத்திக் கொள்கிற) பொருளியல் தேவையின் அடிப்படையில் இடைவினை (Interaction) நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக, காப்புவரிகள் (Protective tariffs), சுதந்திர வர்த்தகம், நல்ல அல்லது கெட்ட பணஏற்பாடு, போன்றவற்றின் மூலம் அரசு ஒரு செல்வாக்கைச் செலுத்துகிறது. 1648 இலிருந்து1830 வரையில் ஜெர்மனிலிருந்த மிக மோசமான  பொருளியல் நிலைமையின் விளைவாகத் தோன்றிய ஜெர்மன் பண்பிலாரின் (Philistine)  கடைக்கோடித் தனமான வலுக்கேடும் முக்கியத்துவமும் கூட பொருளியல் விளைவின்றி இருந்ததில்லை; முதலில் அடக்க ஒடுக்கமாகவும்(Pietism)  பிறகு உணர்ச்சி மேலிட்டும், அதன் பிறகு இளவரசர்களையும், பிரபுக்களையும் கெஞ்சுகின்ற அடிமை மனப்பாங்கோடும் அவர்கள் தம்மை வெளிப்படுத்துவதற்கும் கூடப் பொருளியல் விளைவு இல்லாமலில்லை. அது மீட்பு  (Recovery)க்கான மாபெரும் தடைகளில் ஒன்றாக இருந்தது; புரட்சிகர,  மற்றும் நெப்போலியன் போர்கள், நீண்டநாள் பட்ட துயரைக் கூர்மையானதாக்கிய வரையிலும் இத்தடை அசைக்கப்படாமலிருந்தது.  எனவே மக்கள் இங்குமங்கும் வசதியாகக் கற்பனை செய்ய முயல்கிறவாறு பொருளியல் நிலைமை தானாகவே ஒரு விளைவை உண்டாக்குவதில்லை; ஆனால் மனிதர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்; எனினும்  அவர்களைப் பக்குவப்படுத்துகிற ஒரு குறிப்பிட்ட சுற்றுச் சூழலில், உண்மையில் ஏற்கனவே நிலவுகின்ற உறவுகளின் அடிப்படையில் அவ்வாறு உருவாக்குகிறார்கள். அவர்கள் அரசியல், சித்தாந்தம் போன்ற மற்ற உறவுகளால் எவ்வளவுதான் ஆதிக்கம் செலுத்தப்பட்டாலும் கூட பொருளியல் உறவுகளே இன்னும் இறுதியான தீர்மானகரமானவையாக உள்ளன; பொருளியல் உறவுகளே புரிதலுக்கு இட்டுச் செல்லும் கருப்பொருளாக அமைகின்றன.

(ஆ) மனிதர்கள் தங்கள் வரலாற்றை தாங்களே உருவாக்குகிறார்கள்; ஆனால் அவர்கள் இன்னமும் ஒரு கூட்டு விருப்புறுதியுடன், ஒரு கூட்டுத் திட்டத்தின்படியோ அல்லது தெளிவாக வரையறுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலோ அவ்வாறு செய்வதில்லை. அவர்களுடைய ஆர்வங்கள் மோதுகின்றன. அந்தக் காரணத்தினாலேயே அத்தகைய சமுதாயங்கள் யாவும் அவசியத்தால் (Necessity) ஆளப்படுகின்றன; அவசியத்தின் நிரப்புப்பகுதியும் விளக்கமும் (Manifestation) விபத்து (accident)  ஆகும். எல்லா விபத்துக்கள் மூலம் இங்கே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிற அவசியம் என்பது மீண்டும் இறுதியில் பொருளியல் அவசியமேயாகும். 
 
இத்துடன் தொடர்புபடுத்தி பெரிய மனிதர்கள் என்றழைக்கப் படுகிறவர்களை ஒருவர் கவனிக்க வேண்டும். எனவே, அத்தகைய ஒரு மனிதர், அதிலும் துல்லியமாக அந்த மனிதர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் தோன்றுகிறார் என்பது முற்றிலும் தற்செயலான நிகழ்ச்சியே என்பது உறுதி. ஆனால் அவரை ஒருவர் அகற்றிவிட்டால் அவருக்கு மாற்றாக வேறொருவர் தேவைப்படுகிறார்.  நல்லவரோ கெட்டவரோ இந்த மாற்றாள் கிடைப்பார். நீண்டகாலப் போக்கில் அவர் கிடைத்துவிடுவார்.

பிரஞ்சுக் குடியரசு தன்னுடைய சொந்தப் போர்த் தொழிலால் ஓய்ந்து போயிருந்த வேளையில் அவசியமாக இருந்ததால் அந்த நெப்போலியன், அந்தக் குறிப்பிட்ட கார்சிகான் (Corsican) இராணுவ சர்வாதிகாரியாக வந்தமை தற்செயல் நிகழ்ச்சியே ஆகும். ஆனால் ஒரு நெப்போலியன் இல்லாவிட்டால் அந்த இடத்தை இன்னொருவர் நிரப்பியிருப்பார் என்பதை, அவசியப்படும் போது உடனே ஒருவர் கிடைக்கிறார் என்பது மெய்ப்பிக்கிறது. சீசர், அகஸ்டர், கிராம்வெல் போன்றவர்களைக் காண்க.

மார்க்ஸ் வரலாற்றின் பொருள்முதலியல் கருத்தைக் கண்டுபிடித்தார்; அதே வேளையில், தியெர்ரி மிக்னெட், குய்ஸோட், மற்றும் 1850 வரையிருந்த எல்லா ஆங்கில வரலாற்றாசிரியர்களும் அந்தக் கருத்துக்காகக் கடுமுயற்சி செய்ததைப் புலப்படுத்தும் சான்றுகளாவர். அதே கருத்தியலை மார்கனும் கண்டுபிடித்தார் என்பது அதற்கான காலம் கனிந்துள்ளது என்பதையும், அதைக் கண்டுபிடிக்க வேண்டியது மட்டுமே பாக்கியிருந்தது என்பதையும் மெய்ப்பிக்கிறது.

எனவே, எல்லா எதிர்பாராத நேர்வுகளையும் போலவே, வரலாற்றின் தோற்றநேர்வுகளும் (Apparent Contingencies of history) உள்ளன. நாம் புலனாய்வு செய்கிற குறிப்பிட்ட துறை  (Sphere) மென்மேலும் பொருளியல் சூழலிலிருந்து (Economic sphere) பிரிக்கப்பட்டுத் தூய கருத்தியலான சித்தாந்தத்தை எந்தளவு நெருங்குகிறதோ அந்த அளவுக்கு  மென்மேலும் அதன் வளைகோடு வளைந்து நெளிந்து செல்லும். ஆனால் நீங்கள் வளைகோட்டின் சராசரி அச்சை வரைந்தால் நாம் எடுத்துக் கொண்ட காலப்பகுதி நீண்டதாகவும், நாம் கவனிக்கும் புலம் பரந்தும் இருக்கும் போது இந்தக் கோடு மேலும் மேலும் பொருளியல் வளர்ச்சியின் அச்சுக்குக் கிட்டத்தட்ட இணையாகச் செல்லுவதை நீங்கள் காணலாம்.
ஜெர்மனியில் சரியான புரிதலுக்கு மிகப் பெரும் தடையாக இருப்பது இலக்கியத்தால் பொருளியல் வரலாறு பொறுப்பற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும். ஒருவருக்குப் பள்ளியில் பயிற்சியளித்துப் புகட்டியுள்ள வரலாற்று எண்ணங்களிலிருந்து விடுபடுதல் மிகவும் கடினம் என்பது மட்டுமன்றி, அவ்வாறு செய்வதற்கு இன்றியமையாத விசயங்களை எடுத்துக் கொள்ளுதல் அதைவிடக் கடினமாகும். எடுத்துக்காட்டாக, பழைய ஜி – வான் குலிச்சை எவர் படித்திருக்கிறீர்கள்? அவருடைய வரண்டபொருட்திரட்டில் எண்ணற்ற அரசியல் உண்மைகளைத் தெளிவுபடுத்துவதற்கான எவ்வளவோ செய்திகள் அடங்கியுள்ளன.

அப்படியே, பதினெட்டாவது புருமேரில் மார்க்ஸ் கொடுத்துள்ள நேர்த்தியான எடுத்துக்காட்டு  உங்களுடைய கேள்விகளுக்கு நல்ல விடையை அளிக்குமென நான் கருதுகிறேன்; ஏனெனில் அது நடைமுறை எடுத்துக்காட்டாகும். மேலும் நான் அதில் பல அம்சங்களை டூரிங்கிற்கு மறுப்பு என்ற நூலில் பகுதி 1ல் 9-11 ஆம் அதிகாரத்திலும், பகுதி 11ல் 2-4 ஆம் அதிகாரத்திலும், பகுதி 111ல் முதல் அதிகாரத்திலும், முன்னுரையிலும், பேயர்பாக்கின் இறுதிப்பிரிவிலும் தொட்டுச் சென்றுள்ளேன்.

அருள் கூர்ந்து மேலே சொன்னவற்றில் ஒவ்வொரு சொல்லையும் மிக நுணுக்கமாகப் பார்க்காதீர்கள்; ஆனால் பொதுத் தொடர்பை மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கு எழுதுவதை வெளியிடவேண்டுமென்றிருந்தால் எப்படி எழுதக் கடமைப்பட்டிருப்பேனோ அவ்வாறு இப்போது உங்களுக்கு எழுதவில்லை என்பதை  நான் வருத்ததுடன் தெருவிக்கிறேன்…….

------------ மார்க்ஸ், எங்கல்ஸ் தேர்தெடுக்கப்பட்ட கடிதங்கள் பக் (441-43)

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்    செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு  
         
லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 98 - 102


சமரன் வெளியீடு

No comments:

Post a Comment