Monday 23 April 2012

செயல்தந்திரம் குறித்த மேற்கோள்கள் - லெனின்


லெனின் மேற்கோள்கள்

செயல்தந்திரத்தின் வரையறை
கட்சியின் செயல்தந்திரம் என்பதன் மூலம், நாம் ‘கட்சியின் அரசியல் நடத்தை, அல்லது பண்பு அதன் அரசியல் செயல்முறையின் திசைவழி மற்றும் வகைகள்’ ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம்.
புதிய கடமைகள் அல்லது  புதிய அரசியல் சூழ்நிலை ஆகியவற்றின் விளைவாக, கட்சி முழுமைக்கும் அதன் சரியான அரசியல் நடத்தையை வரையறுப்பதற்காகக் கட்சியின் காங்கிரஸ்களால் செயல்தந்திரத் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
(லெனின் – இரு செயல்தந்திரங்கள் – லெ.நூ. தி. 9.ப.22)
செயல்தந்திரம் பற்றிய கேள்வியானது கட்சியின் அரசியல் நடத்தையைப் பற்றிய கேள்வியாகும்.
நடத்தை வழியானது கோட்பாடு, வரலாற்றுக் குறிப்புக்கள், அரசியல் சூழ்நிலை முழுவதையும் பகுப்பாய்வு செய்தல், இன்ன பிறவற்றின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
(லெ.நூ. தி. 9.ப.26)


நிகழ்வுகளுக்குப் பின்னால் ஸ்தம்பித்து நிற்கின்ற, நிகழ்வுகள் தோன்றிய பிறகு அதற்கு ஏற்றாற்போல் தகவமைத்துக் கொள்கிற செயல்தந்திர முழக்கங்களைக் கொள்வதன் மூலம், நாம் திருப்தி அடைந்து கொள்ளமுடியாது. நம்மை முன்நோக்கி அழைத்துச் செல்கிற, நமக்கு முன்னால் உள்ள பாதையை ஒளியூட்டிக் காட்டக் கூடிய, இயக்கத்தின் உடனடிக் கடமையில் இருந்து நம்மை மேலே உயர்த்துகிற செயல்தந்திர முழக்கங்களை நாம் கொண்டிருக்க வேண்டும். தொழிலாளர் கட்சியின் உறுதியான செயல்தந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தீர்மானிக்க முடியாது. தன்னுடைய செயல்தந்திர முடிவுகளின் நம்பகத் தன்மையைப் புரட்சிகர வர்க்கத்தின் முன்னேறிய கடமைகளுக்குத் தகுந்த  மதிப்புக் கொடுத்து மார்க்சியத்தின் கோட்பாடுகளோடு சேர்க்க வேண்டும்.

சூழ்நிலை மற்றும் செயல்தந்திரத்தைப் பற்றிய மதிப்பீடு

”நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; அது செயலுக்கான வழிகாட்டி: என்று தோழர் எங்கெல்ஸ் தன்னையும் தன் புகழ்வாய்ந்த நண்பரையும் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
அடிக்கடி மறக்கப்படுகிற அந்த மார்க்சிய அம்சத்தை இந்தச் சீரிய வாசகம் குறிப்பிடத்தக்க அழுத்தத்துடனும் தெளிவுடனும் வலிவுறுத்துகிறது. இதை மறந்து விடுவதன் மூலம் நாம் மார்க்சியத்தை ‘ஒரு பக்க நோக்கு உள்ளதாகவும்’ ‘உருவைக் கெடுப்பதாகவும்’ ‘உயிரற்றதாகவும்’ ஆக்குகிறோம். அதன் உயிரோட்டத்தைச சிதைப்பதுடன், நாம் அதனின் அடிப்படைத் தத்துவ அடிக்கட்டுமானங்களான இயக்கவியல், வரலாற்று வளர்ச்சியின் கோட்பாடுகள் அனைத்தும் தழுவிய தன்மையையும், முரண்பாடுகளையும், பறித்து விடுகிறோம்.வரலாற்றின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் மாறக்கூடிய, நிகழ்காலத்தின் அரசியல் கடமையுடன் அதற்குள்ள தொடர்பை நாம் குறைத்து மதிப்பீடு செய்கிறோம்.
”உண்மையிலேயே நமது காலத்திய ருஷ்யாவில் மார்க்சிய உண்மையின் மீது அக்கறை உள்ளவர்களிடையே  மிகவும் அடிக்கடி மார்க்சியத்தின் இந்த அம்சத்தில் பார்வையற்ற மக்களை நாம் சந்திக்கிறோம். சமீப வருடங்களில் ருஷ்யாவானது என்றும் இராத .வேகத்துடனும், என்றும் இராத சக்திகளுடனும் வெளிப்படையாகவே சூழ்நிலைகளை மாற்றக்கூடிய ஒரு மாற்றங்களுக்குள்ளாகி இருக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெளிவாகும்-சமூக, அரசியல் நிலைமைகளே, பெரும்பாலான நேரடி மற்றும் உடனடி வழிகளில் செயலுக்கான நிபந்தனைகளையும்,  அதன் காரணமாக அதன் நோக்கங்களையும் தீர்மானிக்கின்றன. பொதுவான, அடிப்படையான உறவு மாறினால் ஒழிய வரலாற்றின் திருப்பங்களுடன் மாறாக-  ருஷ்யாவின் பொருளாதர வெளிப்பாட்டின் (பொருளாதாரம் மட்டுமல்ல) பொதுவான போக்கு, ரஷ்ய சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களுக்கிடையேயான அடிப்படையான உறவு போன்று- கடந்த ஆறு வருடங்களாக மாறியிருக்கவில்லை என்பது தெளிவாகும்.
ஆனால், நமது உடனடி மற்றும் நேரான செயலுக்கான  நோக்கங்களை கூர்மையாகவே, இந்தக் காலகட்டத்தில் உண்மையான சமூக- அரசியல் சூழ்நிலைகள் மாறியுள்ளதைப் போன்று மாறியுள்ளன.
 ஏனெனில் மார்க்சியம் என்பது உயிர்த்துடிப்புள்ள தத்துவமாகும். அதன் பல்வேறு வகையான பார்வைகள் மிகவும் முக்கியமானவையாகும்.
(லெ.நூ..தி.17, பக் 39-41)

மார்க்சியம் நம்மைச் சரியான விதத்திலும், புறவயமாகவும் வர்க்க உறவுகளைப் பற்றியும், ஒவ்வொரு வரலாற்றுச் சூழலின் கறாரான, விஷேட குணாம்சங்களையும் சோதித்தறிய, பகுப்பாய்வு செய்யுமாறு கோருகிறது. போல்ஷெவிக்குகளாகிய நாம், கொள்கைக்கு விஞ்ஞான அடிப்படையைக் கொடுக்கக் கூடிய மிகவும் முக்கியமான இந்தக் கோரிக்கையினை நடைமுறைப்படுத்த எப்போதும் முயன்று இருக்கிறோம்.
“நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; ஒரு செயலுக்கான வழிகாட்டியாகும்” என்று மார்க்சும், எங்கெல்சும் எப்போதும் கூறிவந்ததுடன் “விதிகளை மனனம் செயவதும், அதைத் திரும்பத்திரும்பக் கூறுவதும் பொதுவான கடமைகளைப் பற்றிக் கூறுவதற்கே தகுதியுள்ளது” என்று சரியான விதத்தில் பரிகசித்துள்ளனர். தத்துவமானது வரலாற்று நிகழ்வின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பொருளாதார அரசியல் நிபந்தனைகளுக் கேற்றாற் போன்று அவசியமானதாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
(லெனின், செயல்தந்திரம் பற்றிய கடிதங்கள், முதல் கடிதம்)

குறிப்பான தருணத்தில் நிலைமையை எவ்வாறு மதிப்பிடுவது.

சமூக சனநாயகக் கட்சியில், இருவித போக்குகளும், நகல் அறிக்கையைக் கொடுத்திருந்த போதிலும், புரட்சியில் தொழிலாளர்களின் கடமைகளை
வரையறுத்து, நிகழ்காலத்தைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை மட்டும் கொண்டு,  ஒன்றுபட்ட காங்கிரஸ் ஒரு முடிவினை ஏற்றுக் கொள்ளாது. நிகழ்ச்சி
நிரலில் சூழ்நிலையைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்தல் வேண்டும் என்ற கேள்வி இருந்தது.  மேலும் அதுபற்றி காங்கிரஸில் விவாதிக்கப்பட்டது. இந்தக்
கேள்வியினைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

முதலாவதாக, நாம் சமூகப் பொருளாதார, அரசியல் வளர்ச்சிப் போக்குகளின் நிலையில் இருந்து, தற்காலத்திய புரட்சிகர சூழ்நிலையைப் பற்றியும், இன்றைய ரஷ்யாவின் அரசியல் வர்க்க  பிரிவுகளை (மாற்றங்களைப்) பற்றியும், மூன்றாவதாக சமூக சக்திகளின் அரசியல் பிரிவுகளுடன் சமூக-சனநாயகத் தொழிலாளி கட்சியின் அடிப்படைக் கடமையைப் பற்றியும், ஆய்வுகள் செய்ய வேண்டும்.                                            
(லெ.நூ..தி.12, பக் 210)

அரசு வடிவத்தில் உண்டாகும் மாற்றங்கள் பற்றி

சமூகத்தின் சமூக வடிவமைப்பும், அரச அதிகாரமும் மாற்றங்களினாலே குறிக்கப்படுகின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், சமூக நடவடிக்கையில் ஒரு அடிகூட நாம் எடுத்து வைக்க முடியாது. இந்த மாற்றங்களைப் பற்றிய புரிதலே,  எதிர்காலத்திற்கான வரையறையைத் தீர்மானிக்கிறது. மேலும், இவற்றின் மூலம் நாம் உண்மையிலேயே, நாம் தெரியாத  விசயங்களைப் பற்றி, சோம்பேறித்தனமான அவமானத்தை அல்ல. பொருளாதார அரசியல் வளர்ச்சிகளின் அடிப்படைப் போக்குகளைப் பற்றிக் கூறுகிறோம்.இத்தகைய போக்குகளின் விளைவே, நாட்டின் உடனடி எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. இவைதான், ஒவ்வொரு அறிவார்ந்த பொதுமனிதனின் கடமைகள், திசைவழிகள், செயல்முறையின் குணாம்சம் ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றன. கடமைகள், திசைவழிகள், செயல்முறையின் குணாம்சம் ஆகியவற்றைப் பற்றிய  இந்தக் கடைசிக் கேள்வியானது மிக அதிக அளவில் நெருக்கமாக கலைப்புவாதத்தைப் பற்றிய கேள்வியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

-- (லெ.நூ..தி.17, பக் 144) அரச அதிகாரத்தின் சமூக வடிவம், தோற்றம், மற்றும் கலைப்புவாதம் என்பதிலிருந்து.

லெனினியத்தின் அடிப்படையான மூன்று செயல்தந்திரக் கோட்பாடுகள்- ஸ்ராலின்


லெனினியத்தின் அடிப்படையான
மூன்று செயல்தந்திரக் கோட்பாடுகள்
 -ஸ்டாலின்

லெனினியத்துக்குக் குறிப்பான செயல்தந்திரக் கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல்  சீனாவில் ‘புரட்சியின் சரியான தலைமை’ என்பது இருக்கமுடியாது; அல்லது பொதுவுடைமை அகிலத்தின் வழியினைச் சோதித்துப் பார்ப்பது முடியாது. நான், அத்தகைய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கீழ்கண்டவையாகக் கருதுகிறேன்;

அ).  ஒரு நாட்டைச் சார்ந்த தொழிலாளிவர்க்க  இயக்கத்துக்குக் கம்யூனிஸ்டு அகிலம் வழிகாட்டும் நெறிமுறைகளை வரையறுத்துக் கொடுக்கும் போது, ஒவ்வொரு தனித்தனி நாட்டின், குறிப்பான மற்றும் தனித்த  விசேச அம்சங்களைத் தவறாது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆ). ஒவ்வொரு நாட்டின் கம்யூனிஸ்டுக் கட்சியும், பாட்டாளிவர்க்கத்துக்கு நண்பர்களை- அது தற்காலிக ஊசலாட்டமிக்க ,நிலையற்ற நம்பகமற்றதாக இருக்குமேயானாலும் கூட  வெல்வதற்கான மிகச் சிறிய சந்தர்ப்பங்களையும் கூட தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இ). ’மக்கள்‘ பெருந்திரளின் அரசியல் கல்விக்குப்’ பிரச்சாரமும் கிளர்ச்சியும் மட்டும் போதாது; மக்களுடைய சொந்த அரசியல் அனுபவத்தையே அது கோருகிறது என்ற உண்மைக்குத் தவறாமல் உரிய மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் தருவது ஓர் அவசியமான நிபந்தனையாகும் என் நான் எண்ணுகின்றேன். இதன்றி, சீனத்தில் அகிலத்தின் வழியை மார்க்சிய வழியில் நிரூபிப்பது என்பது முடியாது.

தொழிலாளி வர்க்கத்தின் நெகிழ்வுத்தன்மையுடைய, அதே நேரத்தில் நன்கு ஆராய்ந்து வந்தடைந்த கொள்கை, அதனுடைய எதிரியின் முகாமில் உள்ள பிளவுகளையும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் திறன், மக்கள் பெருந்திரளின் நண்பர்களாக இருக்கக் கூடிய தொழிலாளர் வர்க்கக் கட்சியின் புரட்சிகரமான பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கட்டுப்படுத்தாத, தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்கள் பெருந்திரளையும் அமைப்பாக்கும் கட்சியின் வேலையினைக் கட்டுப்படுத்தாத  நண்பர்களை- அவர்கள் ஊசலாட்ட  முள்ளவர்களாகவும் நிலையற்றவர்களாகவும் இருப்பார்களேயானாலும் கூட கண்டுபிடிக்கும் திறன், இவைதான் வேறு எதனையும் விட திறன் மிக்க எதிரியை அழிப்பதற்கு தேவையாக உள்ளது.

மூன்றாவது செயல்தந்திரக் கோட்பாடு முழக்கங்களின் மாற்றங்கள் மற்றும் அத்தைகைய மாற்றத்தின் முறைகள், வரிசை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது கட்சிக்கான முழக்கத்தை எங்ஙனம் மக்களுக்கான முழக்கமாக மாற்றுவது என்ற வினாவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. மேலும், இது மக்களை எப்படி, எந்த வழிவகைகளில் புரட்சிகர நிலைக்குக் கொண்டுவருவது, இதன்மூலம் அவர்கள்  தாங்களாகவே, தங்களது சொந்த அரசியல் அனுபவத்தின் மூலமாக, கட்சி முழக்கத்தின் சரியான தன்மையை உணர்ந்து கொள்ளலாம் என்பதுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

ஆனால், முன்னேறிய முழுவான கட்சியானது 1917 ஏப்ரலில் மில்யுகோவ்-கெரன்ஸ்கி அரசாங்கத்தைத் தூக்கியெறிவது தவிர்க்கமுடியாது என்பதை, தானே முன்னதாகவே உணர்ந்திருந்தது என்பது  நல்ல செய்தியாக இருந்தது. ஆனால் முன்வந்து  அந்த அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து சோவியத் அரசாங்கத்தை  நிர்மாணிப்பது என்ற முழக்கத்தை அன்றைய முழக்கமாக முன்வைப்பதற்கு, இது- கட்சியின் அத்தகைய நிலைமட்டும்- போதுமானதாக இல்லை.

‘அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே’ என்ற விதியினை  உடனடி எதிர்காலத்தைக் காண  தொலைநோக்கு நிலையிலிருந்து, இன்றைய  முழக்கமாக, உடனடிச் செயலுமான முழக்கமாக மாற்றுவதற்கு, மற்றுமொரு தீர்மானகரமான கூறு தேவைப்பட்டது. அதாவது மக்கள் இந்த முழக்கத்தின் சரியான தன்மையை தாங்களாகவே உணர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். இதைச் செயலூக்கமுள்ளதாகச் செய்ய, ஏதாவது ஒரு வழியில் கட்சிக்கு உதவ வேண்டும்.

உடனடி எதிர்காலத்தின் தொலைநோக்கு நிலையிலான விதிக்கும், இன்றைய கட்டத்தின் முழக்கமான விதிக்கும் கறாரான வேறுபாடு வரையப்பட வேண்டும்.

………… முழக்கத்தின் மாற்றம், மக்கள் பெருந்திரளைப் புதிய புரட்சிகர நிலைக்குக் கொண்டுவரும் வழிகள் மற்றும் உத்திகள் கட்சியின் கொள்கை, செயற்பாடுகள்  மற்றும் சரியான தருணத்தில் ஒரு முழக்கத்தை மற்றொரு முழக்கத்தால் இடம் பெயரச் செய்தல் ஆகியவற்றின் மூலம், பெருந்திரளான உழைக்கும் மக்களை,  தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் கட்சிப்பாதையின் சரியான தன்மையை அங்கிகரிக்க உதவுதல் இவைதான், லெனினியத்தின் மூன்றாவது செயல்தந்திரக் கோட்பாட்டினுடைய கோரிக்கைகளாகும்.

(சம காலத்திய கருத்துக்களைப் பற்றிய குறிப்புக்கள்—ஸ்டாலின் --- எதிர்த்தரப்புப் பற்றி – பக் 735) சமரன் தொகுப்பு பக் 150-52

Monday 16 April 2012

அரசியல் செயல்தந்திரம் மற்றும் முழக்கங்களின் முக்கியத்துவம்-வி.இ.லெனின்.



அரசியல் செயல்தந்திரம் மற்றும் முழக்கங்களின் முக்கியத்துவம்-

வி.இ.லெனின்.

புரட்சி நமக்குக் கற்றுக் கொடுக்கும், திரளான மக்களுக்கும் கற்றுக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று போர்க்குணமிக்க (போராட்ட ஊக்கமுள்ள) ஓர் அரசியல் கட்சியின் முன் நிற்கும் கேள்வி இதுதான்: புரட்சிக்கு நாம் எதையாவது கற்றுக் கொடுக்க இயலுமா? புரட்சி மீது பாட்டாளிவர்க்க முத்திரை இடுவதற்கு,  சொல்லளவில் அல்லாமல்  புரட்சியை ஓர் உண்மையான, நிர்ணயமான வெற்றிக்கு இட்டுச் செல்வதற்கு சனநாயகப் போக்குள்ள முதலாளியவர்க்கத்தின் நிலையின்மையையும் அரை மனத்தன்மையையும், துரோகத் தன்மையையும் செயலறச் செய்வதற்கு, நம் சமூக- சனநாயக் கொள்கையின் (Doctrine) தவறின்மையையும், முழுவதும் புரட்சிகரமான ஒரே வர்க்கமாகத் திகழும் பாட்டாளிவர்க்கத்துடன் நமக்குள்ள பிணைப்பையும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள இயலுமா என்பதே.

இக்குறிக்கோளை நோக்கியே நம் முயற்சிகள் அனைத்தையும் நெறிப்படுத்த வேண்டும். ஒரு புறத்தில் அரசியல் நிலைமையைப் பற்றிய  நம் மதிப்பீடு சரியாக இருப்பதையும்,  நம் செயல்தந்திர முழக்கங்கள் சரியாக இருப்பதையும் பொறுத்து, மறுபுறத்தில் திரள்திரளான தொழிலாளிகளின் உண்மையான போராடும் சக்தி இந்த முழக்கங்களை ஆதரிக்குமா என்பதையும் பொறுத்தும்தான்  இக்குறிக்கோளின் சாதனை இருக்கும். நம் கட்சியின் எல்லா அமைப்புக்களின், எல்லாக் குழுக்களின் வழக்கமான, முறையான, நடைமுறைக்குரிய வேலையும் பிரச்சாரமும், கிளர்ச்சி, அமைப்புத் தொடர்புடைய வேலையும், மக்களோடுள்ள பிணைப்புக்களை வலுப்படுத்தி விரிவாக்குவதை நோக்கிச் செலுத்தப்படுகிறது. இந்த வேலை எப்போதும் அவசியமேயாயினும் கூட, புரட்சிக் காலத்தில் இதைப் போதுமானது என்று கருத முடியாது. இப்படிப்பட்ட நிலைமையில் தொழிலாளிவர்க்கம் வெளிப்படையான புரட்சிச் செய்கைக்கு உள்ளியல்பாக வேட்கை கொள்கிறது. இச்செய்கையின் குறிக்கோள்களை நாம் சரிவர வகுத்தளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மக்களுடன் நமக்குள்ள பிணைப்புக்களைப் பற்றி இன்று நிலவும் நம்பிக்கையின்மை புரட்சியில் பாட்டாளிவர்க்கத்தின் பாத்திரத்தைப் பற்றிய  முதலாளிவர்க்கப் போக்கான கருத்துக்களை மூடிமறைக்கத்தான்  மிக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்பதை மறக்கக் கூடாது. தொழிலாளிவர்க்கத்துக்கு கல்வியளித்து ஒழுங்கமைப்பதற்கு (Organise) இன்னும் நாம் நிறைய வேலை செய்தாக வேண்டுமென்பதில் ஐயமில்லை. ஆனால் சாராம்சத்தில் இன்றுள்ள கேள்வி இதுதான்.  இந்தக் கல்வி மற்றும் அமைப்புப் பணியில் அரசியல் ரீதியில் முக்கியமாக எதை வலியுறுத்திக் காட்டவேண்டும்?. தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டபூர்வமான  சங்கங்களையா அல்லது ஆயுதமேந்திய புரட்சி எழுச்சியையா, புரட்சிகரமான படையையும், புட்சிகரமான அரசாங்கத்தையும் படைக்கும் பணியையா? தொழிலாளிவர்க்கத்துக்கு கல்வியளித்து ஒழுங்கமைப்பதற்கு இரண்டும்தான் பயன்படுகின்றன.உண்மையில் இரண்டும் அவசியம்தான். ஆனால் இன்றைய புரட்சியின் பிரச்சனை மொத்தத்தில் இதுதான்.; தொழிலாளிவர்க்கத்துக்கு கல்வியளித்து  ஒழுங்கமைக்கும் பணியில் எதை வலியுறுத்த வேண்டும் முந்தியதையா, பிந்தியதையா?

 தொழிலாளிவர்க்கம் முதலாளிவர்க்கத்துக்கு துணைபோகும் படை என்ற பாத்திரத்தை வகிக்குமா? (இந்த துணைபோகும் படை ஏதேச்சாதிகார முறையை எதிர்த்துத் தாக்குவதில் வலிமை மிக்க சக்தியாய் இருந்தாலும் கூட அரசியல் ரீதியிலே சாத்தியமற்றது) அல்லது அது மக்கள் புரட்சியில் தலைவனாகப் பாத்திரம் வகிக்குமா என்பதைப் பொறுத்துத்தான் புரட்சியின் விளைவு இருக்கிறது.உணர்வுள்ள முதலாளிவர்க்கச் சார்பாளர்கள் இதை நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான், ஒஸ்வபஷ் தேனியே அக்கிமவிசமை,  சமூக-சனநாயக இயக்கத்தில் “பொருளாதாரவாதத்தையும்” புகழ்ந்து பேசுகிறது;  இந்தப் போக்கு இன்று தொழிற்சங்கங்களையும் சட்டபூர்வமாக இருந்துவரும் சங்கங்களையும் முன்னணியில் கொணர்ந்து நிறுத்தி வருகிறது. எனவேதான் புதிய- இஸ்கரா கருத்துக்களில் காணும் அக்கீமவ் வாதத்துக்குரிய போக்கை (ஒஸ்வபஷ்தேனியே இதழ் 72 இல்) திரு.ஸ்துருவே வரவேற்கிறார். எனவேதான், ருஷ்யாவில் சமூக-சனநாயக தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் முடிவுகளின் வெறுக்கத்தக்க புரட்சிப் பார்வையின் குறுகிய தன்மையை அவர் அவ்வளவு வலிந்து தாக்குகிறார்.

இப்பொழுது சமூக-சனநாயகவாதிகள் மக்களுக்கு தலைமைதாங்கி நடத்திச் செல்வதற்குப் பிழையற்ற செயல்தந்திர முழக்கங்களைப் பெற்றிருப்பது சிறப்பான முக்கியத்துவமுள்ள விஷயமாகும். புரட்சிக் காலப்பகுதியில் கோட்பாட்டு ரீதியிலே சரியான செயல்தந்திர முழக்கங்களின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்துவது போல் அபாயகரமானது வேறொன்றுமில்லை. எடுத்துக்காட்டாக இஸ்க்ரா தனது 104 ஆம் இதழில் சமூக-சனநாய இயக்கத்திலுள்ள தன் எதிராளிகளின் பக்கம் உண்மையிலேயே போய்விடுகிறது.  மேலும் அதே சமயம், காலத்தின் முன்  ஓடுகிறவையாயும் பல தோல்விகள், தவறுகள் முதலியவற்றைக் கண்டபோதிலும், முன்சென்று கொண்டிருக்கும் இயக்கத்தின் பதையைக் காட்டுகின்றவையாயும் உள்ள முழக்கங்களின் செயல்தந்திர முடிவுகளின் முக்கியத்துவத்தை அது இழித்துப் பழித்துப் பேசுகிறது. மாறாக, வெறுமே நிகழ்ச்சிகளின் வழிப்போக்கில் பின்னடைந்து நடக்காமல் உறுதியான  மார்க்சியக் கோட்பாடுகளின் உணர்ச்சியில் பாட்டாளிவர்க்கத்தை வழிநடத்த விரும்பும் கட்சிக்கு சரியான செயல்தந்திர முடிவுகளை தயாரிப்பது மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ருஷ்யாவின் சமூக-சனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் தீமானங்களிலும் சரி, இக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றுவிட்ட பகுதியினர் நடத்திய  மாநாட்டின் தீமானங்களிலும் சரி, மிகச் சரிநுட்பமான கவனமாகச் சிந்தித்துத்தெளிந்த, முழு நிறைவாக உருப்பெற்றுள்ள செயல்தந்திரக் கருத்துக்களைக் காண்கிறோம். இவை யாரோ தனித்தனி எழுத்தாளர்கள் போகின்ற போக்கில் வெளியிட்ட கருத்துக்கள் அல்ல; சமூக-சனநாயக வாதிப் பாட்டாளிவர்க்கத்தின் பொறுப்புள்ள சார்பாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கருத்துக்கள் இவை. நம் கட்சி மற்றெல்லாக் கட்சிகளையும் விட முன்னால் நிற்கிறது; ஏனெனில் அதனிடம் ஒரு சரிநுட்பமான, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட  செயல்திட்டம் (Programme)உள்ளது. ஒஸ்வபஷ் தேனியேயைச் சேர்ந்த சனநாயகப் போக்குள்ள முதலாளிவர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தின்றும், சோசலிஸ்டு- புரட்சியாளர்களின் புரட்சிகரமான சொல்லடுக்கு ஜாலத்தினின்றும் வேறுபட்டதாயுள்ள  நிலையில் தன் செயல்தந்திரத் தீர்மானங்களின்பால் கோட்பாட்டு பூர்வமான ஒரு போக்கைக் கொண்டிருப்பதில் அது மற்றக் கட்சிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். புரட்சி நடந்துவரும் போதுதான் அக் கட்சிகள் ஒரு நகல் வேலைத்திட்டத்தை முன்வைப்பதைப் பற்றித் திடீரென சிந்திக்கத் தலைப்பட்டன. தம் கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருப்பது ஒரு முதலாளியப் புரட்சிதானா என்று ஆராய்ந்தறிவது பற்றியும் முதன்முறையாகச் சிந்திக்கத் தலைப்பட்டன.

எனவேதான், ருஷ்யாவின் சமூக-சனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் செயல்தந்திரத் தீர்மானங்களையும் மாநாட்டின் செயல்தந்திரத் தீர்மானங்களையும் கவனமாகப் பயிவதும். அவற்றிலேயுள்ள  மார்க்சியக் கோட்பாடுகளில் இருந்து வழுவிய திரிபுகள் எவை என்று வரையறுத்துக் கொள்வதும், சனநாயகப் புரட்சியில் சமூக சனநாயகவாதிப் பாட்டாளிவர்க்கத்தின் பருண்மையான  பணிகளைப் பற்றித் தெளிந்த அறிவு பெறுவதும் புரட்சிகரமான சனநாயகவாதிகளின் மிகமிக அவசரமான பணி என்று கருதுகிறோம். இந்தப் பணியின் பொருட்டுத்தான் இக்குறுநூல் எழுதப்பட்டிருக்கிறது.

ருஷ்யாவின் சமூக சனநாயகத் தொழிலாளர் கட்சி முழுவதும் எதிர்காலத்தில் முற்றாக ஒன்றுபடுவதற்கு அடிப்படையாகப் போர்த்தந்திர ஒற்றுமைக்குச்  சொல்லளவில் இணங்கச் செய்வதோடு நின்று கொள்ளாமல் நடைமுறையில் அதற்கு வழியைச் செப்பனிட விரும்புகிறவர்களுக்கு மார்க்சியக் கோட்பாடுகளின் நிலையிலிருந்தும் புரட்சியின் படிப்பினைகளின் நிலையிலிருந்தும் நமது செயல்தந்திரங்களைச் சோதித்தறிவது அவசியமாகும்.

1905, ஜூலை.                                                                                                         நி.லெனின்

‘சனநாயகப் புரட்சியில் சமூக சனநாயகத்தின் இரண்டு செயல்தந்திரங்கள்’ என்ற நூலின் முன்னுரையிலிருந்து.