லெனினியத்தின் அடிப்படையான
மூன்று செயல்தந்திரக் கோட்பாடுகள் -ஸ்டாலின்
லெனினியத்துக்குக் குறிப்பான செயல்தந்திரக் கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் சீனாவில் ‘புரட்சியின் சரியான தலைமை’ என்பது இருக்கமுடியாது; அல்லது பொதுவுடைமை அகிலத்தின் வழியினைச் சோதித்துப் பார்ப்பது முடியாது. நான், அத்தகைய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கீழ்கண்டவையாகக் கருதுகிறேன்;
அ). ஒரு நாட்டைச் சார்ந்த தொழிலாளிவர்க்க இயக்கத்துக்குக் கம்யூனிஸ்டு அகிலம் வழிகாட்டும் நெறிமுறைகளை வரையறுத்துக் கொடுக்கும் போது, ஒவ்வொரு தனித்தனி நாட்டின், குறிப்பான மற்றும் தனித்த விசேச அம்சங்களைத் தவறாது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆ). ஒவ்வொரு நாட்டின் கம்யூனிஸ்டுக் கட்சியும், பாட்டாளிவர்க்கத்துக்கு நண்பர்களை- அது தற்காலிக ஊசலாட்டமிக்க ,நிலையற்ற நம்பகமற்றதாக இருக்குமேயானாலும் கூட வெல்வதற்கான மிகச் சிறிய சந்தர்ப்பங்களையும் கூட தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இ). ’மக்கள்‘ பெருந்திரளின் அரசியல் கல்விக்குப்’ பிரச்சாரமும் கிளர்ச்சியும் மட்டும் போதாது; மக்களுடைய சொந்த அரசியல் அனுபவத்தையே அது கோருகிறது என்ற உண்மைக்குத் தவறாமல் உரிய மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் தருவது ஓர் அவசியமான நிபந்தனையாகும் என் நான் எண்ணுகின்றேன். இதன்றி, சீனத்தில் அகிலத்தின் வழியை மார்க்சிய வழியில் நிரூபிப்பது என்பது முடியாது.
தொழிலாளி வர்க்கத்தின் நெகிழ்வுத்தன்மையுடைய, அதே நேரத்தில் நன்கு ஆராய்ந்து வந்தடைந்த கொள்கை, அதனுடைய எதிரியின் முகாமில் உள்ள பிளவுகளையும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் திறன், மக்கள் பெருந்திரளின் நண்பர்களாக இருக்கக் கூடிய தொழிலாளர் வர்க்கக் கட்சியின் புரட்சிகரமான பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கட்டுப்படுத்தாத, தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்கள் பெருந்திரளையும் அமைப்பாக்கும் கட்சியின் வேலையினைக் கட்டுப்படுத்தாத நண்பர்களை- அவர்கள் ஊசலாட்ட முள்ளவர்களாகவும் நிலையற்றவர்களாகவும் இருப்பார்களேயானாலும் கூட கண்டுபிடிக்கும் திறன், இவைதான் வேறு எதனையும் விட திறன் மிக்க எதிரியை அழிப்பதற்கு தேவையாக உள்ளது.
மூன்றாவது செயல்தந்திரக் கோட்பாடு முழக்கங்களின் மாற்றங்கள் மற்றும் அத்தைகைய மாற்றத்தின் முறைகள், வரிசை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது கட்சிக்கான முழக்கத்தை எங்ஙனம் மக்களுக்கான முழக்கமாக மாற்றுவது என்ற வினாவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. மேலும், இது மக்களை எப்படி, எந்த வழிவகைகளில் புரட்சிகர நிலைக்குக் கொண்டுவருவது, இதன்மூலம் அவர்கள் தாங்களாகவே, தங்களது சொந்த அரசியல் அனுபவத்தின் மூலமாக, கட்சி முழக்கத்தின் சரியான தன்மையை உணர்ந்து கொள்ளலாம் என்பதுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.
ஆனால், முன்னேறிய முழுவான கட்சியானது 1917 ஏப்ரலில் மில்யுகோவ்-கெரன்ஸ்கி அரசாங்கத்தைத் தூக்கியெறிவது தவிர்க்கமுடியாது என்பதை, தானே முன்னதாகவே உணர்ந்திருந்தது என்பது நல்ல செய்தியாக இருந்தது. ஆனால் முன்வந்து அந்த அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து சோவியத் அரசாங்கத்தை நிர்மாணிப்பது என்ற முழக்கத்தை அன்றைய முழக்கமாக முன்வைப்பதற்கு, இது- கட்சியின் அத்தகைய நிலைமட்டும்- போதுமானதாக இல்லை.
‘அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே’ என்ற விதியினை உடனடி எதிர்காலத்தைக் காண தொலைநோக்கு நிலையிலிருந்து, இன்றைய முழக்கமாக, உடனடிச் செயலுமான முழக்கமாக மாற்றுவதற்கு, மற்றுமொரு தீர்மானகரமான கூறு தேவைப்பட்டது. அதாவது மக்கள் இந்த முழக்கத்தின் சரியான தன்மையை தாங்களாகவே உணர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். இதைச் செயலூக்கமுள்ளதாகச் செய்ய, ஏதாவது ஒரு வழியில் கட்சிக்கு உதவ வேண்டும்.
உடனடி எதிர்காலத்தின் தொலைநோக்கு நிலையிலான விதிக்கும், இன்றைய கட்டத்தின் முழக்கமான விதிக்கும் கறாரான வேறுபாடு வரையப்பட வேண்டும்.
………… முழக்கத்தின் மாற்றம், மக்கள் பெருந்திரளைப் புதிய புரட்சிகர நிலைக்குக் கொண்டுவரும் வழிகள் மற்றும் உத்திகள் கட்சியின் கொள்கை, செயற்பாடுகள் மற்றும் சரியான தருணத்தில் ஒரு முழக்கத்தை மற்றொரு முழக்கத்தால் இடம் பெயரச் செய்தல் ஆகியவற்றின் மூலம், பெருந்திரளான உழைக்கும் மக்களை, தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் கட்சிப்பாதையின் சரியான தன்மையை அங்கிகரிக்க உதவுதல் இவைதான், லெனினியத்தின் மூன்றாவது செயல்தந்திரக் கோட்பாட்டினுடைய கோரிக்கைகளாகும்.
(சம காலத்திய கருத்துக்களைப் பற்றிய குறிப்புக்கள்—ஸ்டாலின் --- எதிர்த்தரப்புப் பற்றி – பக் 735) சமரன் தொகுப்பு பக் 150-52
No comments:
Post a Comment