லெனின் மேற்கோள்கள்
செயல்தந்திரத்தின் வரையறை
கட்சியின் செயல்தந்திரம் என்பதன் மூலம், நாம் ‘கட்சியின் அரசியல் நடத்தை, அல்லது பண்பு அதன் அரசியல் செயல்முறையின் திசைவழி மற்றும் வகைகள்’ ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம்.
புதிய கடமைகள் அல்லது புதிய அரசியல் சூழ்நிலை ஆகியவற்றின் விளைவாக, கட்சி முழுமைக்கும் அதன் சரியான அரசியல் நடத்தையை வரையறுப்பதற்காகக் கட்சியின் காங்கிரஸ்களால் செயல்தந்திரத் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.(லெனின் – இரு செயல்தந்திரங்கள் – லெ.நூ. தி. 9.ப.22)
செயல்தந்திரம் பற்றிய கேள்வியானது கட்சியின் அரசியல் நடத்தையைப் பற்றிய கேள்வியாகும்.
நடத்தை வழியானது கோட்பாடு, வரலாற்றுக் குறிப்புக்கள், அரசியல் சூழ்நிலை முழுவதையும் பகுப்பாய்வு செய்தல், இன்ன பிறவற்றின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.(லெ.நூ. தி. 9.ப.26)
நிகழ்வுகளுக்குப் பின்னால் ஸ்தம்பித்து நிற்கின்ற, நிகழ்வுகள் தோன்றிய பிறகு அதற்கு ஏற்றாற்போல் தகவமைத்துக் கொள்கிற செயல்தந்திர முழக்கங்களைக் கொள்வதன் மூலம், நாம் திருப்தி அடைந்து கொள்ளமுடியாது. நம்மை முன்நோக்கி அழைத்துச் செல்கிற, நமக்கு முன்னால் உள்ள பாதையை ஒளியூட்டிக் காட்டக் கூடிய, இயக்கத்தின் உடனடிக் கடமையில் இருந்து நம்மை மேலே உயர்த்துகிற செயல்தந்திர முழக்கங்களை நாம் கொண்டிருக்க வேண்டும். தொழிலாளர் கட்சியின் உறுதியான செயல்தந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தீர்மானிக்க முடியாது. தன்னுடைய செயல்தந்திர முடிவுகளின் நம்பகத் தன்மையைப் புரட்சிகர வர்க்கத்தின் முன்னேறிய கடமைகளுக்குத் தகுந்த மதிப்புக் கொடுத்து மார்க்சியத்தின் கோட்பாடுகளோடு சேர்க்க வேண்டும்.
சூழ்நிலை மற்றும் செயல்தந்திரத்தைப் பற்றிய மதிப்பீடு
”நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; அது செயலுக்கான வழிகாட்டி: என்று தோழர் எங்கெல்ஸ் தன்னையும் தன் புகழ்வாய்ந்த நண்பரையும் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
அடிக்கடி மறக்கப்படுகிற அந்த மார்க்சிய அம்சத்தை இந்தச் சீரிய வாசகம் குறிப்பிடத்தக்க அழுத்தத்துடனும் தெளிவுடனும் வலிவுறுத்துகிறது. இதை மறந்து விடுவதன் மூலம் நாம் மார்க்சியத்தை ‘ஒரு பக்க நோக்கு உள்ளதாகவும்’ ‘உருவைக் கெடுப்பதாகவும்’ ‘உயிரற்றதாகவும்’ ஆக்குகிறோம். அதன் உயிரோட்டத்தைச சிதைப்பதுடன், நாம் அதனின் அடிப்படைத் தத்துவ அடிக்கட்டுமானங்களான இயக்கவியல், வரலாற்று வளர்ச்சியின் கோட்பாடுகள் அனைத்தும் தழுவிய தன்மையையும், முரண்பாடுகளையும், பறித்து விடுகிறோம்.வரலாற்றின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் மாறக்கூடிய, நிகழ்காலத்தின் அரசியல் கடமையுடன் அதற்குள்ள தொடர்பை நாம் குறைத்து மதிப்பீடு செய்கிறோம்.
”உண்மையிலேயே நமது காலத்திய ருஷ்யாவில் மார்க்சிய உண்மையின் மீது அக்கறை உள்ளவர்களிடையே மிகவும் அடிக்கடி மார்க்சியத்தின் இந்த அம்சத்தில் பார்வையற்ற மக்களை நாம் சந்திக்கிறோம். சமீப வருடங்களில் ருஷ்யாவானது என்றும் இராத .வேகத்துடனும், என்றும் இராத சக்திகளுடனும் வெளிப்படையாகவே சூழ்நிலைகளை மாற்றக்கூடிய ஒரு மாற்றங்களுக்குள்ளாகி இருக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெளிவாகும்-சமூக, அரசியல் நிலைமைகளே, பெரும்பாலான நேரடி மற்றும் உடனடி வழிகளில் செயலுக்கான நிபந்தனைகளையும், அதன் காரணமாக அதன் நோக்கங்களையும் தீர்மானிக்கின்றன. பொதுவான, அடிப்படையான உறவு மாறினால் ஒழிய வரலாற்றின் திருப்பங்களுடன் மாறாக- ருஷ்யாவின் பொருளாதர வெளிப்பாட்டின் (பொருளாதாரம் மட்டுமல்ல) பொதுவான போக்கு, ரஷ்ய சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களுக்கிடையேயான அடிப்படையான உறவு போன்று- கடந்த ஆறு வருடங்களாக மாறியிருக்கவில்லை என்பது தெளிவாகும்.
ஆனால், நமது உடனடி மற்றும் நேரான செயலுக்கான நோக்கங்களை கூர்மையாகவே, இந்தக் காலகட்டத்தில் உண்மையான சமூக- அரசியல் சூழ்நிலைகள் மாறியுள்ளதைப் போன்று மாறியுள்ளன.
ஏனெனில் மார்க்சியம் என்பது உயிர்த்துடிப்புள்ள தத்துவமாகும். அதன் பல்வேறு வகையான பார்வைகள் மிகவும் முக்கியமானவையாகும்.(லெ.நூ..தி.17, பக் 39-41)
மார்க்சியம் நம்மைச் சரியான விதத்திலும், புறவயமாகவும் வர்க்க உறவுகளைப் பற்றியும், ஒவ்வொரு வரலாற்றுச் சூழலின் கறாரான, விஷேட குணாம்சங்களையும் சோதித்தறிய, பகுப்பாய்வு செய்யுமாறு கோருகிறது. போல்ஷெவிக்குகளாகிய நாம், கொள்கைக்கு விஞ்ஞான அடிப்படையைக் கொடுக்கக் கூடிய மிகவும் முக்கியமான இந்தக் கோரிக்கையினை நடைமுறைப்படுத்த எப்போதும் முயன்று இருக்கிறோம்.
“நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; ஒரு செயலுக்கான வழிகாட்டியாகும்” என்று மார்க்சும், எங்கெல்சும் எப்போதும் கூறிவந்ததுடன் “விதிகளை மனனம் செயவதும், அதைத் திரும்பத்திரும்பக் கூறுவதும் பொதுவான கடமைகளைப் பற்றிக் கூறுவதற்கே தகுதியுள்ளது” என்று சரியான விதத்தில் பரிகசித்துள்ளனர். தத்துவமானது வரலாற்று நிகழ்வின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பொருளாதார அரசியல் நிபந்தனைகளுக் கேற்றாற் போன்று அவசியமானதாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.(லெனின், செயல்தந்திரம் பற்றிய கடிதங்கள், முதல் கடிதம்)
குறிப்பான தருணத்தில் நிலைமையை எவ்வாறு மதிப்பிடுவது.
சமூக சனநாயகக் கட்சியில், இருவித போக்குகளும், நகல் அறிக்கையைக் கொடுத்திருந்த போதிலும், புரட்சியில் தொழிலாளர்களின் கடமைகளை
வரையறுத்து, நிகழ்காலத்தைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை மட்டும் கொண்டு, ஒன்றுபட்ட காங்கிரஸ் ஒரு முடிவினை ஏற்றுக் கொள்ளாது. நிகழ்ச்சி
நிரலில் சூழ்நிலையைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்தல் வேண்டும் என்ற கேள்வி இருந்தது. மேலும் அதுபற்றி காங்கிரஸில் விவாதிக்கப்பட்டது. இந்தக்
கேள்வியினைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
முதலாவதாக, நாம் சமூகப் பொருளாதார, அரசியல் வளர்ச்சிப் போக்குகளின் நிலையில் இருந்து, தற்காலத்திய புரட்சிகர சூழ்நிலையைப் பற்றியும், இன்றைய ரஷ்யாவின் அரசியல் வர்க்க பிரிவுகளை (மாற்றங்களைப்) பற்றியும், மூன்றாவதாக சமூக சக்திகளின் அரசியல் பிரிவுகளுடன் சமூக-சனநாயகத் தொழிலாளி கட்சியின் அடிப்படைக் கடமையைப் பற்றியும், ஆய்வுகள் செய்ய வேண்டும்.(லெ.நூ..தி.12, பக் 210)
அரசு வடிவத்தில் உண்டாகும் மாற்றங்கள் பற்றி
சமூகத்தின் சமூக வடிவமைப்பும், அரச அதிகாரமும் மாற்றங்களினாலே குறிக்கப்படுகின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், சமூக நடவடிக்கையில் ஒரு அடிகூட நாம் எடுத்து வைக்க முடியாது. இந்த மாற்றங்களைப் பற்றிய புரிதலே, எதிர்காலத்திற்கான வரையறையைத் தீர்மானிக்கிறது. மேலும், இவற்றின் மூலம் நாம் உண்மையிலேயே, நாம் தெரியாத விசயங்களைப் பற்றி, சோம்பேறித்தனமான அவமானத்தை அல்ல. பொருளாதார அரசியல் வளர்ச்சிகளின் அடிப்படைப் போக்குகளைப் பற்றிக் கூறுகிறோம்.இத்தகைய போக்குகளின் விளைவே, நாட்டின் உடனடி எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. இவைதான், ஒவ்வொரு அறிவார்ந்த பொதுமனிதனின் கடமைகள், திசைவழிகள், செயல்முறையின் குணாம்சம் ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றன. கடமைகள், திசைவழிகள், செயல்முறையின் குணாம்சம் ஆகியவற்றைப் பற்றிய இந்தக் கடைசிக் கேள்வியானது மிக அதிக அளவில் நெருக்கமாக கலைப்புவாதத்தைப் பற்றிய கேள்வியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-- (லெ.நூ..தி.17, பக் 144) அரச அதிகாரத்தின் சமூக வடிவம், தோற்றம், மற்றும் கலைப்புவாதம் என்பதிலிருந்து.
No comments:
Post a Comment