Tuesday, 21 February 2012

திட்டத்திற்கும் செயல்தந்திரத்திற்கும் இடையே உள்ள உறவு வி.ஐ.லெனின்

திட்டத்திற்கும் செயல்தந்திரத்திற்கும் இடையே உள்ள உறவுவி.ஐ.லெனின்

ரஷ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் திட்டமானது, புரட்சிகர மார்க்சியம் நிறைவு செய்திருப்பதின் மொத்த தொகுப்பாகும்.


இந்த தொகுப்பினை, மூன்று முக்கிய இனங்கள் பூர்த்தி செய்கின்றன.

1.   கட்சியின் திட்டம்.
2.   அதனுடைய செயல்தந்திரம்
3.   எங்கும் அதிகமாகப் பரவி வியாபித்திருக்கின்ற, ஆதிக்கம் செலுத்துகின்ற தத்துவ மற்றும் அரசியல் போக்குகளைப் பற்றி அல்லது சனநாயகத்திற்கும் சோசலிசத்துக்கும் அதிக அளவில் ஊறுவிளைவிக்கின்ற போக்குகளைப் பற்றிக் கட்சியின் மதிப்பீடு.

ஒரு திட்டமின்றி, ஒரு கட்சியானது எவ்விதமாக நிகழ்ச்சிகள் ஏற்பட்ட போதிலும் தன்னுடைய பாதையை அனுசரித்துச் செல்லுகின்ற, ஓர் ஒருங்கிணைந்த உயிரோட்டமுள்ள, அரசியல் பொருளாக இருக்க முடியாது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பற்றி ஓர் மதிப்பீடு, நமது காலத்திய வெறுப்பூட்டக் கூடிய  பிரச்சனைகளைப் பற்றிய தெளிவான பதிலுரைகள் அளித்தல், இவை இரண்டின் அடிப்படையில்  உருவாக்கப்பட்ட ஓர் செயல்தந்திர வழி இன்றி நாம் தத்துவவாதிகளைக் கொண்டவர்களாக
இருப்போமேயன்றி, ஓர் இயங்குகின்ற அரசியல் முழுமையாக நமது கட்சி இருக்க முடியாது.

“செயலூக்கமுள்ள” நடப்பிலுள்ள அல்லது வழக்கத்திற்கு வரவுள்ள தத்துவ, அரசியல் போக்குகளைப் பற்றிய ”செயலூக்கமுள்ள” ஓர் மதிப்பீடு இன்றித் திட்டமும், செயல்தந்திரமும் _ (சாராம்சத்தைப் பற்றிய அவசியமான புரிதல் எது எது என்ன வென்பதைப் பற்றிய புரிதல், இவற்றுடன் தான் திட்டமும் செயல்தந்திரமும் நடைமுறைச் செயலின் ஆயிரக்கணக்கான விரிந்த
குறிப்பான மற்றும் உயர்ந்த கறாரான  கேள்வியின் மீது பிரயோகிக்கப்பட முடியும் அல்லது அதனைப் பற்றிய மதிப்புக் கூற முடியும் )_ இறந்த சரத்துக்களாக சீரழிந்து போகலாம்.

”செயலூக்கமுள்ள” நடப்பிலுள்ள அல்லது வரவிருக்கிற சித்தாந்த, அரசியல் போக்குகளை மதிப்பீடு செய்யாமல், செயல் தந்திரமும், ஆயிரக்கணக்கான, விரிவானதும், தனித்துவம் மிகமிகக் குறிப்பானதுமான நடைமுறைச் செயல்களின்  கேள்விகளைத் தேவையான  இன்றியமையாத
புரிதலுடன், எது எது என்ன என்ன என்ற புரிதலோடு அமுல்படுத்தவோ அவற்றின் மேல் பிரயோகிக்கவோ முடியாது என்பதை எந்த வகையிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் உயிரற்ற சரத்துக்களாகச் சீரழிந்து விடலாம்.

(லெ.தே.நூல் தொகுப்பு 17 பக்கம் 278&286)

Tuesday, 7 February 2012

போல்ஷெவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா? வி.ஐ.லெனின்


போல்ஷெவிக்குகள் அரச அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
(போல்ஷெவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா?)


-வி.இ.லெனின்

சோவியத்துக்கள் ஒரு புதிய அரசுக் கருவி ஆகும்;

இது, முதலாவதாக, ஆயுதந்தாங்கிய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் படையை அளிக்கிறது; பழைய நிலையான படையைப் போன்று இப்படை மக்களிடமிருந்து விலகி நிற்பதல்ல. ஆனால் மக்களோடு மிகவும் நெருக்கமாகக் கட்டுப்பட்டு இருக்கிறது. இராணுவ நிலையிலிருந்து நோக்கினால் இப்படை பழைய படைகளோடு ஒப்பிட முடியாத  அளவுக்கு அதிக ஆற்றலுடையதாக இருக்கிறது; புரட்சியின் நிலையிலிருந்து நோக்கினால் இப்படையினிடத்தில் வேறு எதையும் வைக்க முடியாது.

இரண்டாவதாக, இக்கருவி மக்களோடு, பெரும்பான்மையான மக்களோடு ஒரு பிணைப்பைத் தருகிறது;  இப்பிணைப்புப் போன்ற ஒன்று- மிகவும் குறைந்த அம்சங்களில் ஒத்திருப்பதாகக் கூட – பழைய அரசுக் கருவியில் இருந்திராத அளவுக்கு நெருக்கமாகவும் கலைக்க முடியாத படியும், அவ்வளவு எளிமையாக நிரூபிக்கத்தக்கதாகவும் புதுப்பிக்கத்தக்கதாகவும் இருந்ததில்லை.

மூன்றாவதாக, இந்தக் கருவியின் ஆட்களை மக்களே தேர்தெடுக்கிறார்கள்;  மக்கள் விரும்புகின்ற போது அதிகார வர்க்க முறைகள் ஏதுமின்றித் திரும்ப அழைத்துக் கொள்ள முடியும்; இந்தக் காரணத்தால் இது பழைய அரசு வடிவங்களை விட மேலதிக சனநாயகத் தன்மையுடையது.

நான்காவதாக, மிகவும் பல்வேறுபட்ட தொழில்களுடன் ஒரு நெருங்கிய தொடர்பை இது அளிக்கிறது; அப்படியே சிவப்புநாடா முறை இல்லாமல் பலதரப்பட்டதும் மிகவும் புரட்சிகரமானதுமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கிறது.

ஐந்தாவதாக, முன்னணியினருக்கு, அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிலும், தொழிலாளிகளிலும், உழவர்களிலும் உள்ள, மிக மிக வர்க்க உணர்வு பெற்ற, மிக மிக ஆற்றல் பெற்ற, மிகமிக முற்போக்கான பிரிவினர்க்கு ஓர் அமைப்பு ரீதியான வடிவத்தை அது கொடுக்கிறது; அதனால் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் முன்னணியினர் இவ்வர்க்கங்கள் முழுவதன் பரந்த மக்களை மேலே தூக்கிவிடவும், பயிற்சியளிக்கவும், வழிநடத்திச் செல்லவும் உதவக் கூடிய ஒரு கருவியாக அது அமைகிறது. இவ்வர்க்கங்களின் பரந்த மக்கள் பிரிவினர் இதுவரை அரசியல் வாழ்விலிருந்தும் வரலாற்றிலிருந்தும் முற்றிலும் வெளியே ஒதுங்கி நிற்கின்றனர்.

ஆறாவதாக, பாராளுமன்ற முறையின் நற்பயன்களை உடனடி மற்றும்  நேரடி சனநாயகத்தின் நற்பயன்களுடன், அதாவது மக்கள் தேர்தெடுத்த சார்பாளர்களிடம் சட்டச் செயற்பாடுகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை ஒன்று சேர்க்க வாய்ப்பளிக்கிக்றது. பூர்ஷ்வா பாராளுமன்ற முறையுடன் ஒப்பிடும்போது, இது சனநாயக மேம்பாட்டில் ஒரு முன்னோக்கிய அடியாகும்; இது உலகளாவிய வரலாற்று ரீதியான முக்கியத்துவம் உடையதாகும்.

மார்க்சியமும் புரட்சி எழுச்சியும்- நி.லெனின்



மார்க்சியமும் புரட்சி எழுச்சியும்

ருஷ்யாவின் சமூக-சனநாயகத் தொழிலாளர்கள் (போல்ஷெவிக்குகள்) கட்சியின் மையக் குழுவுக்கு ஒரு கடிதம்.

ஆதிக்கமுள்ள ”சோசலிஷ்டுக்” கட்சிகள் ஆக விஷமத்தனமாக கையாண்டும். பெருப்பாலும் மிகப் பெருமளவு விரிவாகப் பரப்பி வரும் மார்க்சியம் பற்றிய புரட்டுக்களின் ஒன்று புரட்சி எழுச்சிக்கான தயாரிப்பும், பொதுவான புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதிவரும் “பிளான்கிவாதம்” என்று கூறும் சந்தர்ப்பவாத பொய்யேயாகும்.

சந்தர்ப்பவாதத்தின் தலைவரான பெர்ன்ஷ்டைன் மார்க்சியத்தை  பிளான்கின்வாதம் எனக் குற்றம் சாட்டியது மூலம் ஏற்கனவே அவப்பேறான புகழை ஈட்டியிருந்தார். நமது இன்றைய சந்தர்ப்பவாதிகள் பிளான்கின்வாதம் என்று கூக்கிரலிடுவது மூலம் பெர்ன்ஷ்டைனின் அற்பமான “கருத்துக்களை” கிஞ்சிதம் மேம்படுத்தவோ அல்லது செழுமைப்படுத்தவோ இல்லை.
புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதுகிறார்கள் என்பதால் மார்க்சியவாதிகள் மீது பிளான்கின்வாதம் என்று கூறிக் குற்றம் சாட்டப்படுகிறது! மார்க்ஸ் இந்த விஷயத்தில் மிகவும் திட்டவட்டமாக—துல்லியமாக, ஐயத்துக்கிடமற்ற தன்மையில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். புரட்சி எழுச்சியைக் குறிப்பாயும் ஒரு கலை என்று குறிப்பிட்டு அது கலையாகக் கட்டாயம் கருதப்பட வேண்டும் என்றும் முதல் வெற்றியை நீங்கள் போராடி அடைய  வேண்டும் பிறகு வெற்றியிலிருந்து வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், எதிரியின் குழப்பத்தைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, எதிரியை எதிரித்துத் தாக்குதலை என்றும் நிறுத்திவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார் என்பதை மார்க்சியர் எவரும் மறுக்கமாட்டார் என்றிருக்கும் பொழுது இதைவிட உண்மையைப் படுமோசமாகப் புரட்டும் செயல் வேறுண்டா?

புரட்சி எழுச்சி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டுமானால் அது சதியாலோசனை மீதோ மற்றும் அல்லது ஒரு கட்சியினையோ நம்பிச் சார்ந்திருக்கக் கூடாது. மாறாக முன்னேற்றமான வர்க்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவே முதல் நிபந்தனை. புரட்சி எழுச்சி மக்களின் புரட்சிகரமான கிளர்ச்சியைச் சார்ந்திருக்க வேண்டும். இது இரண்டாவது நிபந்தனை. புரட்சி எழுச்சி வளர்ந்து வரும் புரட்சி வரலாற்றின் திருப்புமுனையைச் சார்ந்திருக்க வேண்டும்; அப்பொழுது மக்களின் முன்னேற்றமான அணிகளின் செயற்பாடு அதன் உச்சத்தில் இருக்கும். எதிரிகளின் அணிகளிலும் புரட்சியின் பலவீனமான அரை மனது மற்றும் உறுதியற்ற நண்பர்களின் அணிகளிலும் ஊசலாட்டங்கள் வலுவாக இருக்கும். இது மூன்றாவது நிபந்தனை. புரட்சி எழுச்சி பற்றிய பிரச்சனையை எழுப்புவதற்கான  இந்த மூன்று நிபந்தனைகளும் மார்க்சியத்தைப் பிளான்கிவாதத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

ஆயினும் இந்த நிபந்தனைகள் நிலவும் போது, புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதமறுப்பது  மார்க்சியத்துக்குத் துரோகம் செய்வதாகும்; புரட்சிக்குத் துரோகம் செய்வதாகும்.

நிகழ்ச்சிகளின் முழுமையான போக்கும். புரட்சி எழுச்சி நாள் நிகழ்ச்சி நிரலில் புறநிலை நோக்கில் வைத்திருக்கும் ஒரு தருணம் குறிப்பாய் இன்றைய தருணமே. இதைக் கட்சி கட்டாயம் உணர வேண்டும் என்பதையும், புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்ட ஒப்பு நோக்கும் முறையினைப் பயன்படுத்துவதும், ஜுலை 3-4 மற்றும் செப்டம்பர் நாட்களுக்கிடையேயான வேறுபாட்டை ஆய்வு செய்வதும் சிறப்பானதாக இருக்கும்.

ஜூலை 3-4-இல் செய்ய வேண்டிய சரியான காரியம் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்வதே என்று உண்மையை மீறாமல், வாதிட்டிருக்க முடியும். காரணம், நமது எதிரி நம்மை எப்படியும் புரட்சி எழுச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி, நம்மைக் கலகக்காரர்களாக இரக்கமின்றி நடத்தியிருப்பார்கள். எனினும், இந்தக் காரணத்தால் அந்த நேரத்தில் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள ஆதரவாக முடிவு செய்வது தவறாக இருந்திருக்கும். புரட்சி எழுச்சியின் வெற்றிக்கான புறவய நிலைமைகள் அன்று இருக்கவில்லை.

1.   புரட்சியின் முன்னணிப் படையான வர்க்கத்தின் ஆதரவு இன்னும் இருக்கவில்லை.
பெத்தோகிராத் மற்றும் மாஸ்கோவின் தொழிலாளர் படைவீரர்களிடையே பெரும்பான்மையினர் இன்னும் நம் பக்கமிருக்கவில்லை. இப்போது இரண்டு சோவியத்துக்களிலும் இது முற்றிலும், ஜூலை ஆகஸ்ட் வரலாற்றிலும், போல்ஷெவிக்குகள் “இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டதால்” ஏற்பட்ட அனுபவத்தாலும் கர்னீலவ் கலகத்தின் அனுபவத்தாலும் உருவாக்கப்பட்டது.

2.   அந்தச் சமயத்தில் நாடு தழுவியதான புரட்சிகர கிளர்ச்சி இல்லை. கர்னீலவ் கலகத்துக்குப் பிறகு இப்போது இருக்கிறது. மாகாணங்களிலுள்ள நிலைமையும், பல ஸ்தலங்களில் சோவியத்துக்கள் ஆட்சி அதிகாரம் மேற்கொண்டிருப்பதும், இதை நிரூபிக்கின்றன.

3.   அந்த சமயத்தில் எமது எதிரிகளிடையிலும், உறுதியற்ற குட்டி முதலாளிய வர்க்கத்தினரிடையிலும் எந்தவொரு முனைப்பான அரசியல் அளவுக்கும் ஊசலாட்டம் இருக்கவில்லை. இப்போது ஊசலாட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. நமது தலையாய எதிரி “கூட்டணி நாடுகள்” மற்றும் உலக ஏகாதிபத்தியம். (உலக ஏகாதிபத்தியத்துக்குக் கூட்டணி நாடுகள் தலைமை தாங்குகின்றன) வெற்றிகரமான முடிவு வரை போரை நடாத்துவது, அல்லது ருஷ்யாவுக்கு எதிராகத் தனிப்பட்ட ஒரு சமாதானம் செய்து கொள்வது என்பவற்றுக்கிடையில் ஊசலாடத் தொடங்கியுள்ளது. மக்களிடையே பெரும்பான்மையைத் தெளிவாக இழந்துவிட்ட எமது குட்டி முதலாளிய சனநாயகவாதிகள் மிகப் பெருமளவுக்கு ஊசலாடத் தொடங்கியுள்ளனர். காடேட்டுக்களுடனான கூட்டணியை அதாவது ஒரு கூட்டாட்சியை அவர்கள் மறந்து விட்டார்கள்.

4.   எனவே ஜூலை  3-4 இல் புரட்சி எழுச்சி என்பது தவறாக இருந்திருக்கும்; நாம் ஆட்சி அதிகாரத்தைப் புலப்படுத்தும் வகையில் அரசியல் முறையிலும் நீடித்து வைத்திருக்க முடியாது. சில சமயங்களில் பெத்ரோகிராத் நமது கரங்களில் இருந்த போதும் அதை நாம் புலப்படும் வகையில் நீடித்து வைத்திருக்க முடியாது. காரணம், அந்த சமயத்தில் நமது தொழிலாளர்களும், போர்வீரர்களும் பெத்ரோகிராத்துக்காகப் போராடி உயிரிழந்திருக்க மாட்டார்கள். கேரென்ஸ்கிகள், தெஸெரெத்தேலிகள் மற்றும் செர்னோவ்கள் மீது அந்த சமயத்தில் அந்தக் “கொடூரத் தன்மை” அல்லது மூர்க்கமான பகைமை இருக்கவில்லை. சோசலிஸ்டுப் புரட்சியாளர்களும், மென்ஷெவிக்குகளும் பங்குபற்றிய அடக்குமுறை வேட்டைக்குப் போல்ஷெவிக்குகள் இலக்கானதால் ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து நமது மக்கள் இன்னும் உறுதிப்பட்டிருக்கவில்லை.

ஜூலை 3-4 இல், அரசியல் முறையில் நாம் ஆட்சி அதிகாரத்தை நீடித்து வைத்திருந்து இருக்க முடியாது, காரணம், கர்னீலவ் கலகத்துக்கு முன்னால் இராணுவமும் மாகாணங்களும் பெத்ரோகிராத்தை எதிர்த்து அணிவகுத்துச் செல்லக் கூடும். சென்றிருக்க முடியும்.

இப்போது சித்திரம் முற்றிலும் வேறாக உள்ளது.

நமக்கு ஒரு வர்க்கத்தின் பொரும்பான்மையினது ஆதரவு, புரட்சியின் முன்னணிப் படையின் ஆதரவு இருக்கிறது. அது மக்களைத் திரட்டிச் செல்லும் ஆற்றல் கொண்டது.

நமக்கு மக்களில் பெரும்பான்மையினது ஆதரவு இருக்கிறது. காரணம், செர்னோவின் ராஜினாமா; இது உழவர்கள், சோஷலிஸ்டுப் புரட்சியாளர் கூட்டணியிடமிருந்தோ (சோஷலிஸ்டு- புரட்சியாளர்களிடமிருந்தோ) நிலத்தைப் பெற மாட்டார்கள் என்பதற்கான ஒரே அடையாளமல்லாவிடினும் மிகவும் எடுப்பான தெளிவான அடையாளமாகும். இதுவே புரட்சியின் பொதுமக்கள் ஆதரவுத் தன்மைக்கு முதன்மையான காரணம்.

ஏகாதிபத்தியம் முழுவதும் மென்ஷெவுக்குகள் மற்றும் சோஷலிஸ்டுப் புரட்சியாளர்கள் கூட்டணி முழுவதும் நம்பமுடியாத விசித்திரமான பாணியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு சமயத்தில் எந்த வழியில் செல்வது என்பதை நிச்சயமாக அறிந்துள்ள ஒரு கட்சியின் சாதகமான நிலைமையில் நாம் இருக்கிறோம்.

நமது வெற்றி உறுதிப்பட்டுள்ளது. காரணம், மக்கள் முழுமையாகப் பொறுமை இழந்து விட்டார்கள், எல்லா மக்களுக்குமான உறுதியான மீள்வழியை நாம் காட்டுகிறோம்: “கர்னீலவ் நாட்களில்” நமது தலைமையின் மதிப்பை மக்கள் அனைவருக்கும் எடுத்துக் காட்டினோம். கூட்டணி அரசியல்வாதிகளிடம் ஒரு சமரசத்திற்கான யோசனைகளை முன்மொழிந்தோம். அவர்களது ஊசலாட்டத்தில் எந்தவித குறைவும் இல்லாவிடினும் அவற்றை (யோசனைகளை) அவர்கள் நிராகரித்தார்கள்.

நமது சமரச யோசனை இதுவரை நிராகரிக்கப்படவில்லை என்றும், சனநாயக மாநாடு அதை இன்னும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் நினைப்பது மாபெருந்தவறாகும். இந்த சமரச யோசனை ஒரு கட்சியால் கட்சிகளிடம் முன்மொழியப்பட்டது; இது வேறு எந்த வழியிலும் முன்மொழியப்பட்டிருக்க முடியாது. இது கட்சிகளால் நிராகரிக்கப்பட்டது. சனநாயக மகாநாடு ஒரு மாநாடு என்பதைத் தவிர வேறு எதுவுமல்ல: ஒரு விஷயத்தை மறந்து விடக் கூடாது; அதாவது, பெரும்பான்மையான புரட்சிகர மக்கள்- வெறுப்படைந்த ஏழை விவசாயிகள் இதில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கவில்லை. இது மக்களில் சிறுபான்மையினரின் மாநாடு ஆகும். இந்தக் கண்கூடான உண்மையை மறந்துவிடக் கூடாது. சனநாயக மாநாட்டை ஒரு நாடாளுமன்றம் என்று நாம் கருதுவோமானால் அது பெருந் தவறாகும். அது நமது நாடாளுமன்ற மூடத்தனத்தையே அறவே காட்டுகிறது; அது தன்னைத்தானே புரட்சியின் ஒரு நிரந்தரமான சர்வ சுதந்திர நாடாளுமன்றம் என்று பறைசாற்றிக் கொண்டாலும் கூட அது எதையும் முடிவு செய்ய முடியாது. முடிவு செய்யும் அதிகாரம் அதற்கு வெளியே பெத்ரோகிராத் மாஸ்கோ தொழிலாளிவர்க்கக் குடியிருப்பு வட்டாரங்களில் அமைந்திருக்கிறது.

எமக்கு முன்னால் வெற்றிகரமான புரட்சி எழுச்சிக்கான, புறவய நிலைமகள் அனைத்தும் உள்ளன. உலகிலேயே மிகவும் வேதனையானதும் மக்களைச் சலிப்புக்குள்ளாகிவிட்டதுமான ஊசலாட்டத்திற்குப் புரட்சி எழுச்சியில் நாம் பெறும் வெற்றிமட்டுமே முடிவு கட்ட முடியும், புரட்சி எழுச்சியில் நாம் பெறும் வெற்றி மட்டுமே உழவர்களுக்கு உடனடியாக நிலம் வழங்கும். இதற்கான நிலைமையின் தனிச் சிறப்பு வாய்ந்த சாதகம் நமக்கு இருக்கிறது. புரட்சி எழுச்சியில் நாம் பெறும் வெற்றி மட்டுமே புரட்சிக்கு எதிராக முடுக்கப்படும் தனியான சமாதானம் என்ற சூழ்ச்சியைத் தோற்கடிக்கும். முழுமையான மேலும் நீதியான மேலும் முன்னதான சமாதானத்தை, புரட்சிக்கு அனுகூலமான ஒரு சமாதானத்தை வெளிப்படையாகப் பிரேரனை செய்வது மூலம் இதைத் தோற்கடிக்கும்.

இறுதியாக நமது கட்சி மட்டுமே வெற்றிகரமான புரட்சி எழுச்சி மூலம் பெத்ரோகிராத்தைப் பாதுகாக்க முடியும்; ஏனென்றால் சமாதானத்திற்கான நமது யோசனை நிராகரிக்கப்படுமானால், நாம் ஒரு போர் நிறுத்தத்தைக் கூட நாடிப் பெறவில்லையானால், அதன் பின் நாம் “பாதுகாப்புவாதிகள்” ஆகிவிடுவோம். போர்க் கட்சிகளின் தலைமையில் நாம் இருப்போம். நாமே மிக மேம்பட்ட போர்க் கட்சியாகிவிடுவோம். போரை உண்மையிலேயே புரட்சிகரமான முறையில் நடத்துவோம். முதலாளிகளிடம் இருந்து எல்லா ரொட்டிகளையும் (உணவையும்) காலணிகளையும் பறித்துக் கொள்வோம், அவர்களுக்கு ரொட்டிப் பொருக்குகளை மட்டுமே விட்டுவைத்து மரப்பட்டைக் காலணிகளையும் அணிவிப்போம். எல்லா உணவையும், காலணிகளையும் போர்முனைகளுக்கு அனுப்பி வைப்போம்.

அதன் பின் நாம் பெத்ரோகிராதைப் பாதுகாப்போம்.

ருஷ்யாவில் உண்மையிலேயே ஒரு புரட்சிகரப் போரை நடத்துவதற்கான பொருளாதய, ஆன்மீக- இருவகை மூலவளங்களும் இன்னும் அளவற்றதாக இருக்கின்றன. செர்மானியர் நமக்குக் குறைந்த பட்சம் போர்நிறுத்தத்தையாவது அனுமதிப்பார்கள் என்பதற்கான  வாய்ப்புகள் ஒன்றுக்கு நூறு இருக்கிறது. தற்போது ஒரு போர்நிறுத்தத்தை உறுதியாகப் பெறுவது உலகம் முழுவதையும் வென்று பெறுவதாகும்.

                                   *                                    *                                        *

புரட்சியைப் பாதுகாக்கவும், இரு கூட்டணிகளையும் சேர்ந்த ஏகாதிபத்தியவாதிகளும் “தனித்தனியாகத்” துண்டாட விடாமல் ருஷ்யாவைப் பாதுகாக்கவும், பெத்ரோகிராத் மற்றும் மாஸ்கோ தொழிலாளர்களின் புரட்சிஎழுச்சி முற்ற முழு அவசியம் என்பதைக் கண்டுணர்ந்துவிட்ட நாம், முதலில் வளர்ந்துவரும் புரட்சி எழுச்சியின் நிலைமைகளுக்கு ஏற்ப மாநாட்டில் நமது அரசியல் செயல்தந்திரங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்; இரண்டாவதாக, புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத வேண்டும் என்ற மார்க்சின் கருத்தை நாம் சொல்லளவோடு மட்டும் ஏற்கவில்லை என்பதைக் காட்ட வேண்டும்.
மாநாட்டில் ஆள் தொகையைத் தேடித் திரியாமல், ஊசலாட்டக்காரர்களை ஊசலாட்டக்காரர் முகாமிலேயே விட்டு வைக்க அஞ்சாமல் நாம் உடனடியாக போல்ஷெவிக் குழுவை உறுதியாக இணைக்க வேண்டும். ஊசலாட்டக்காரர்கள் உறுதியான பற்றார்வமுள்ள போராட்ட வீரர்கள் முகாமில் இருப்பதை விட அங்கேயே இருப்பது புரட்சி இலட்சியத்துக்கு அதிக பயனுடையதாக இருக்கும்.

நீண்ட பேச்சுக்களின், பொதுவான பேச்சுகளின் ஒவ்வாத தன்மையினை மிகவும் உறுதியான முறையில் வலியுறுத்தியும், புரட்சியைக் காக்க உடனடிப் போராட்டம் அவசியம் என்பதையும், முதலாளித்துவ வர்க்கத்துடன்  முற்றாக முறித்துக் கொள்ளவேண்டியதன் அடிப்படை அவசியத்தையும், இன்றுள்ள அரசாங்கத்தை முழுமையாக அகற்றி எறிவதற்கும், ருஷ்யாவைத் “தனித்தனியாகத்” துண்டாடுவதற்கு ஆயத்தம் செய்துவரும் ஆங்கில-பிரஞ்சு ஏகாதிபத்தியவாதிகளுடன் பூரணமாக முறித்துக் கொள்ளவும், புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தால்  தலைமை தாங்கப்படும் புரட்சிகர சனநாயகவாதிகளிடம் உடனடியாக அனைத்து ஆட்சி அதிகாரமும் மாற்றியளிக்கப்பட வேண்டும் என்பதையும் எல்லாம் வலியுறுத்தும் ஒரு சுருக்கமான பிரகடனத்தைப் போல்ஷெவிக்குகளிடமிருந்து உருவாக்கிப் பெற வேண்டும்.
மக்களுக்கு சமாதானம், உழவர்களுக்கு நிலம், தகாத லாபங்களைப் பறிமுதல் செய்தல், உற்பத்தியை முதலாளிகள் இழிவான முறையில் சீர்குலைப்பதைத் தடை செய்தல் ஆகிய வேலைத்திட்டச்ப் பிரேரணைகள் தொடர்பான இந்த முடிவு குறித்த சுருக்கமான, மிகவும் கூரியதான வகைமுறை விளக்கத்தை நமது பிரகடனம் வழங்க வேண்டும்.

இந்தப் பிரகடனம் எவ்வளவுக்கு எவ்வளவு மேலும் சுருக்கமானதாகவும், அதிகக் கூரியதாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மேலும் நல்லது. மேலும் இரண்டு உயர் முக்கியத்துவமுள்ள  முடிவுகள் மட்டும் இதில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். அதாவது, மக்கள் ஊசலாட்டங்களால் சலிப்படைந்திருக்கிறார்கள், சோஷலிஸ்டு-புரட்சியாளர் மற்றும் மென்ஷெவிக்குகளின் உறுதியின்மையால வெறுப்படைந்திருக்கிறார்கள்; அவை புரட்சிக்குத் துரோகம் செய்து விட்டன. எனவே, இந்தக் கட்சிகளிடமிருந்து திட்டவட்டமாக விலகி முறித்துக் கொள்கிறோம் என்பதே.

மற்றும் இன்னொரு விசயம், பிரதேசக் கைப்பற்றல்கள் இல்லாத சமாதானத்தை உடனடியாக முன்வைப்பது மூலமும், கூட்டணி ஏகாதிபத்தியவாதிகளுடனும் எல்லா ஏகாதிபத்தியவாதிகளுடனும் உடனடியாக முறித்துக் கொள்வது மூலமும் ஒருகால் நாம் உடனே ஒரு போர்நிறுத்தத்தைப் பெறலாம். இல்லையேல் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் முழுவதும் நாட்டைப் பாதுகாக்க ஒன்று திரளும், பாட்டாளிவர்க்கத்தின் தலைமையின் கீழ் புரட்சிகர சனநாயகவாதிகள் உண்மையில் புரட்சிகரமான போரைத் தொடுப்பார்கள்.

இந்தப் பிரகடனத்தைப் படித்த பிறகு, பேச்சு வேண்டாம். முடிவுகள் வேண்டும், தீர்மானம் எழுதுதல் வேண்டாம். செயல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பின் நாம் நமது குழு முழுவதையும் ஆலைகளுக்கும் பாசறைகளுக்கும் அனுப்ப வேண்டும். அவர்களுக்குரிய இடம் அங்குதான், அங்குதான் வாழ்க்கையின் துடிப்பு இருக்கிறது. அங்குதான் நமது புரட்சித் தாரகத்தின்மூலாதாரம் உள்ளது. அங்குதான் சனநாயக மாநாட்டின் இயங்கு சக்தி உள்ளது.

அங்கு, ஆர்வமிக்க, உணர்ச்சியான உரைகளில் நாம் நமது வேலைத்திட்டத்தை விளக்கி, ஒன்று, மாநாடு இதை முற்றிலுமாக ஏற்க வேண்டும் இல்லையேல் புரட்சி எழுச்சிதான் ஏற்படும் என்ற மாற்று யோசனையை முன்வைக்க வேண்டும். நடுப்பாதை இல்லை. தாமதம் சாத்தியமல்ல, புரட்சி செத்துக் கொண்டிருக்கிறது.

பிரச்சனையை இந்த வழியில் முன்வைத்து, நமது குழு முழுவதையும் ஆலைகளிலும் பாசறைகளிலும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் நாம் புரட்சி எழுச்சியைத் தொடக்குவதற்கான சரியான தருணத்தை நிர்ணயிக்க முடியும்.
புரட்சி எழுச்சியை மார்க்சிய வழியில், அதாவது ஒரு கலையாகக் கருத வேண்டுமாயின் நாம் அதே சமயம் ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் புரட்சிப்படைப் பிரிவுகளின் தலைமையகத்தை அமைக்க வேண்டும். நமது படைகளை விநியோகம் செய்ய வேண்டும். நம்பகமான படை அணிகளை மிகவும் முக்கியமான படை முனைகளுக்கு அனுப்ப வேண்டும் அலெக்சாண்டிரின்ஸ்கி அரங்கைச் சுற்றி வளைத்து பீட்டர்-பால் கோட்டைகளைக் கைப்பற்றி இராணுவத் தலைமையையும் அரசாங்கத்தையும் கைது செய்து, எதிரி நகரின் கேந்திர முனைகளை அணுக இடந்தருவதை விட அழிவதே மேல் என்று கருதும் படைப்பிரிவுகள் ஜங்கர்களுக்கும் கொடிய டிவிஷனுக்கும் எதிராக முன்செல்ல வேண்டும். ஆயுதமேந்திய தொழிலாளர்களை அணிதிரட்டி இறுதியான மூர்க்கமான போரில் போராடும் படியும், உடனே தந்தி தொலைபேசி செயலகங்களைக் கைப்பற்றுமாறும் அறைகூவல் விடவேண்டும். நமது புரட்சி எழுச்சித் தலைமையகத்தை மத்திய தொலைபேசிச் செயலகத்துக்கு மாற்றி அதைத் தொலைபேசி மூலம் எல்லா ஆலைகள், எல்லாப் படைப் பிரிவுகள், ஆயுதந்தாங்கிப் போராடும் எல்லா முனைகள் ஆகியவற்றோடும் தொடர்புபடுத்த வேண்டும்.
இன்றைய தருணத்தில் புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதாவிட்டால் மார்க்சியத்தின்பால் மெய்ப்பற்றுடன் இருப்பதோ, புரட்சியின்பால் மெய்பற்றுடன் இருப்பதோ சாத்தியமல்ல என்ற உண்மையைச் சித்தரித்துக்காட்ட மட்டுமே இது உதாரணமாகக் காட்டப்பட்டது.

நி.லெனின்(நூல்திரட்டு, தொகுதி 26, பக்கங்கள் 22-27)

ஒரு பார்வையாளரின் அறிவுரைகள்-வி.ஐ.லெனின்

ஒரு பார்வையாளரின் அறிவுரைகள்

நான்  இந்த வரிகளை அக்டோபர் 8 ஆம் நாள் எழுதுகிறேன். இவை 9 ஆம் நாளிக்குள் பெத்ரோகிராத் தோழர்களுக்குப் போய்ச்சேரும் என்ற நம்பிக்கை எனக்குக் கிஞ்சித்தும் இல்லை. வடக்குப் பிராந்தியம் சோவியத்துகளின் காங்கிரஸ் அக்டோபர் 10 ஆம் நாள்நடைபெற இருப்பதால் இவை முகவும் தாமதமாக வந்து சேரலாம். இருந்த போதிலும் பெத்ரோகிராத் மற்றும்  அந்தப் “பிராந்தியம்” முழுவதும் தொழிலாளர் படையாளிகள் நடத்தவிருக்கும் போராட்டம், விரைவில் நடைபெறும். ஆனால் இன்னும் நடைபெறவில்லை என்று இருக்கும் பட்சத்தில், நான் எனது “பார்வையாளரின் அறிவுரைகளை” அளிக்க முயல்வேன்.

ஆட்சி அதிகாரம் அனைத்தும் சோவியத்துக்களுக்கு மாற்றி வழங்கப்பட வேண்டும் என்பது தெட்டத் தெளிவானது. பாட்டாளிகளின் புரட்சிகர ஆட்சி அதிகாரம் (அல்லது போல்ஷெவிக் ஆட்சி அதிகாரம் – இப்போது இவை  இரண்டும் ஒன்றே) பொதுவாக உலகம் முற்றிலும் குறிப்பாக, போரிடும் நாடுகளில் உள்ள  எல்லா உழைக்கும் மக்கள், எல்லாச் சுரண்டப்படும் மக்கள் மற்றும் ருஷ்ய  உழவர்களின் உச்சபட்சமான அனுதாபத்தையும், தயக்கமற்ற ஆதரவையும் உறுதியாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதை எந்த போல்ஷெவிக்கும் மறுக்கமுடியாது. இந்த மிகவும் நன்கறியப்பட்ட, நீண்ட காலமாக நிலைநாட்டப்பட்டுவிட்ட  உண்மைகள் குறித்து விவரிக்கத் தேவை இல்லை.

இங்கு விவரிக்கப்பட வேண்டுவது என்னவென்றால், ஒரு வேளை எல்லாத்  தோழர்களுக்கும் முற்றும் தெளிவாக இல்லாத சிலவற்றை, அதாவது சோவியத்துக்களுக்கு இப்போது ஆட்சி அதிகாரத்தை மாற்றி வழங்குவது என்பது ஆயுதமேந்திய எழுச்சி என்றே பொருள்படும் என்பதையே ஆகும். இது கண்கூடானதாகத் தோன்றலாம். ஆனால் எல்லோரும் இந்த அம்சம் குறித்துச் சிந்தனை செலுத்தியிந்தார்கள் அல்லது சிந்தனை செலுத்தி வருகிறார்கள் என்று கூற முடியாது. இப்போது ஆயுதமேந்திய எழுச்சியைத் தள்ளுபடி செய்வது, போல்ஷெவிசத்தின் கேந்திர முழக்கம் (எல்லா ஆட்சி அதிகாரமும் சோவியத்துக்களுக்கே) மற்றும் பொதுவாகப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வதேசியவாதத்தைத் தள்ளுபடி செய்வதாகவே பொருள்படும்.

ஆனால் ஆயுதமேந்திய எழுச்சி அரசியல் போராட்டத்தின் ஒரு விஷேட வடிவமாகும். விஷேச விதிகளூக்குக் கட்டுப்பட்டதாகும்.இவை குறித்துக் கவனமாகச் சிந்தித்தல் வேண்டும் “போரைப் போலவே அந்த அளவுக்கு முழுமையாகப் புரட்சி எழுச்சியும் ஒரு கலையாகும்” என்று எழுதிய போது கார்ல் மார்க்ஸ் இந்த உண்மையையே தனிச்சிறப்புடைய துலக்கத்துடன் வெளியிட்டார்.

இந்தக் கலையின் முக்கியமான விதிகள் என்ற முறையில் மார்க்ஸ் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்.

1.   புரட்சிகர எழுச்சியுடன் என்றுமே விளையாட வேண்டாம். ஆனால். அதைத் துவங்கும்போது நீங்கள் கடைசிவரையில் செல்லவேண்டும் என்பதை உறுதியாக உணர்ந்திருக்க வேண்டும்.

2.   தீர்மானகரமான முனையில். தீர்மானகரமான தருணத்தில் மாபெரும் வலுமிக்க சக்திகளை ஒரு முனைப்படுத்த வேண்டும். இல்லையேல், மேலும் நல்ல ஆயத்தங்களும் ஒழுங்குதிரட்சியும் கொண்ட எதிரி கலகக்காரர்களை அழித்துவிடுவார்.

3.   புரட்சி எழுச்சி தொடங்கிவிட்டது என்றால், நீங்கள் மிகப்பெரிய வைராக்கியத்துடன் செயற்படவேண்டும். தவறாமல் எல்லா வழிகளிலும் எதிர்த்தாக்குதலை மேற்கொள்ள வேண்டும். “தற்காப்புப் போக்கு ஆயுதமேந்திய எழுச்சி அனைத்தின் மரணமாகும்.”

4.   நீங்கள் எதிரி மீது திடீர்த் தாக்குதல் தொடுக்க முயலவேண்டும். அவரது படைப்பலம் சிதறிக் கிடக்கும் தருணத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

5.   எவ்வளவு சிறியதாக இருப்பினும் சரி நாள் தோறுமான வெற்றிகளுக்காக (ஒரு நகரம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மணிக்கு மணி என்று சொல்லலாம்) நீங்கள் பாடுபட வேண்டும். “தார்மீக மேநிலையை” எப்பாடுபட்டும் நீடித்து வைத்திருக்க வேண்டும்.

இதுகாறும் “உலகமறிந்துள்ள புரட்சிக் கொள்கையின் மாபெரும் விற்பனரான தந்தோனின் துணிச்சல், துணிச்சல், மேலும் துணிச்சல் (de I’audace, de I’audace de I’audace) என்னும் சொற்களால் ஆயுதமேந்திய எழுச்சி சம்பந்தமாக எல்லாப் புரட்சிகளின் படிப்பினையையும் மார்க்ஸ் தொகுத்தளித்தார்.

ருஷ்யாவுக்கும் 1917 அக்டோபருக்கும் அதை பிரயோகம் செய்தால் அதன் பொருள் எவ்வளவு சடுதியாகவும் எவ்வளவு வேகமாகவும் சாத்தியமோ அது போன்ற ஒரு சமயத்தில் பெத்ரோகிராத் மீது எதிர்த்தாக்குதல், இது உள்ளே இருந்தும் வெளியில் இருந்தும் தவறாமல் தொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்க வட்டாரங்களில் இருந்தும், பின்லாந்தில் இருந்தும், ரெவெலில் இருந்தும், கிரோன்ஷ்டாத்தில் இருந்தும் தொடுக்கப்பட வேண்டும். கடற்படை முழுவதன் எதிர்த்தாக்குதல், நமது “முதலாளித்துவக் காவற்படை”  (இராணூவப் பள்ளி மாணவர்கள்) நமது “வாந்தே துருப்புக்கள்” (கசாக்குப் படையின் பகுதி) இத்தியாதிகளின் 15,000 அல்லது 20,000 (ஒருவேளை அதிகம்) பேரின் மீது படைப் பலத்தின் மாபெரும் மேலாதிக்கத்தை ஒரு முனைப்படுத்தல் என்பதாகும்.

நமது மூன்று பிரதான சக்திகளான கடற்படை, தொழிலாளர்கள், சேனைப் பிரிவுகளைத் தக்கபடி இணைத்து, அவை பின்வருவனவற்றை எப்பாடுபட்டும் தவறாது பற்றிப் பிடித்துவிடாது வைத்திருக்க வகை செய்ய வேண்டும்: (அ) தந்தி அலுவலகம், (ஆ) தொலைபேசி இணைப்பகம், (இ) இரயில்வே நிலையங்கள் (ஈ) எல்லாவற்றுக்கும் மேலாகப் பாலங்கள்.

மிகவும் உறுதியான நபர்கள் (நமது “அதிரடிப் படைகள்” இளம் தொழிலாளர்கள், சிறந்த கடலோடிகள்) சிறிய படைப் பிரிவுகளாக அமைக்கப்பட்டு; மிகவும் முக்கியமான இடங்களைப் பிடித்தடக்கவும் எல்லா இடங்களிலும் எல்லா முக்கியமான இடங்களிலும் எல்லா முக்கியமான செயற்பாடுகளிலும், பங்குபற்றும்படி செய்தல் வேண்டும். உதாரணமாக:

பெத்ரோகிராதைச் சுற்றி வளைத்துக் கொண்டு தொடர்புகளை வெட்டி விடுதல்; கடற்படையினர், தொழிலாளர் மற்றும் துருப்புக்களின் கூட்டுத்தாக்குதல் மூலம் அதைக் கைப்பற்றல் – இந்தப் பணிக்குக் கலையும் மும்மடங்கு துடுக்கும் தேவை. விரோதியின் ”மையங்களை” (இராணுவப்பள்ளி, தந்தி அலுவலகம், தொலைபேசி இணைப்பகம் ஆகியவற்றை) தாக்கிச் சுற்றிவளைத்துக் கொள்ளும் நோக்கமுடன் துப்பாக்கி எறிகுண்டுகளை ஆயுதமாக ஏந்திய சிறந்த தொழிலாளர்களின் படைப்பிரிவுகளை அமைப்பது. அவர்களது கோட்பாட்டு வாசகம்: எதிரி முன்னேற இடம் கொடுப்பதை விட கடைசி மனிதன் வரை சாவது மேல்!” என்பதாக இருக்க வேண்டும்.

போராடுவது என்று முடிவு செய்யப்படுமானால் தலைவர்கள் தந்தோன் மற்றும் மார்க்சின் மாபெரும் கட்டளை வாசகங்களை வெற்றிகரமாகப் பிரயோகிப்பர் என்று நம்புவோமாக.

ருஷ்யப் புரட்சியின் வெற்றியும், உலகப் புரட்சியின் வெற்றியும் ஒருங்கே இந்த இரண்டு அல்லது மூன்று நாள் போராட்டத்தைச் சார்ந்திருக்கிறது.

நூல்திரட்டு தொகுதி 34 பக்கங்கள் 179-181
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும் செயல்தந்திரங்களும் பற்றி-
ஒரு தொகுப்பு – பக்கங்கள் 140-143

தோழர்களுக்குக் கடிதம்

தோழர்களுக்குக் கடிதம்

-    வி.இ.லெனின்

மார்க்சியம் ஓர் ஆழ்ந்த, அறிவார்ந்த பன்முகப் பார்வையுடைய தத்துவமாகும். இதன் காரணமாக, ஆச்சரியமின்றித் துண்டுதுண்டான மேற்கோள்கள் – குறிப்பாக மேற்கோள்களைச் சரியான விதத்தில் எழுப்பாதபோது – மார்க்சியத்திடமிருந்து முறித்துக் கொள்பவர்களின் விவாதங்களிலும், மார்க்சியத்திடமிருந்து பெறப்பட்டுக் காணப்படும். இராணுவ சதியாலோசனை, ஒரு கறாரான வர்த்தக ஸ்தாபனத்தால் அமைக்கப்படவில்லையென்றால், அதன் அமைப்பாளர்கள் அரசியல் இயக்கத்தைப் பொதுவாகவும், சர்வதேசச் சூழலைக் குறிப்பாகவும் பகுத்தாராய்ந்திருக்கவில்லை யென்றால், ஸ்தாபனமானது பெருவாரியான மக்களின் அனுதாபத்தைப் பெற்றிருக்கவில்லையென்றால், புறவய உண்மைகள் நிரூபிப்பது போன்று புரட்சிகர நிகழ்ச்சிகளின் வளர்ச்சி, குட்டிமுதலாளிய சமாதானக் கற்பனைகளுடன் ஒரு நடைமுறை மறுப்பைக் கொண்டு வந்திருக்கவில்லையென்றால். பெருவாரியான  சோவியத் வடிவ அமைப்புக்களின் புரட்சிகரப் போராட்டமானது அதிகாரமுடையதாக அங்கிகரிக்கப்படவில்லையென்றால், அல்லது அவை நடைமுறையில் வென்றிருக்கப்பட வில்லை என்பதைத்  தாங்களாகவே வெளிப்படுத்தியிருக்கிறதெனில், அனைத்து மக்களின் எண்ணத்திற்கு மாறாக அரசாங்கமானது ஓர் அநீதியான போரைத் தொடர்கிறது என்ற மனோபாவமானது இராணுவத்தில் முதிர்ந்திருக்கவில்லை என்றால் (போர்க்காலமானால்) எழுப்பப்படும் கோஷ்ங்கள் (அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே, உழுபவனுக்கே நிலம், அனைத்து ரகசிய உடன்படிக்கைகளையும் ,ரகசிய அதிகாரத்தையும்  உடனே ரத்துச் செய், போரில் பங்கேற்றுள்ள நாடுகள் அனைத்திலும் சனநாயக அமைதிக்கான உடனடிக் கோரிக்கை என்பன போன்றவை) பரந்துபட்டுள்ள அளவில் அறிந்துள்ளதாகவும் பிரபல்யமானதாவும், மாறியிருக்கவில்லையென்றால் முன்னேறிய தொழிலாளர்கள், மக்களின் பயமில்லாத  சூழலையும் கிராமப்புறங்களின் ஆதரவினையும் – தீவிரமான விவசாய இயக்கங்களின் மூலமோ  அல்லது நில உடைமையாளர்களுக்கு எதிராகவும், அவர்களைப் பாதுகாக்கிற அரசுக்கு எதிராகவும், எழுச்சிகளின் மூலமோ ஆதரவு நிரூபிக்கப்பட வேண்டும் – நிச்சயித்துக் கொள்ளவில்லையென்றால் நாட்டின் பொருளாதார நிலைமை, அமைதியான மற்றும் பாராளுமன்ற வழிகளின் மூலம்   பிரச்சனைகளுக்குச் சாதகமான தீர்வுக்கான ஊக்கமான நம்பிக்கைகளை உட்கொண்டிருந்தால் – அது இராணுவ சதி ஆலோசனை – ஒரு பிளாங்கிய வாதமாகும்.

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும் செயல்தந்திரங்களும் பற்றி-
ஒரு தொகுப்பு – பக்கங்கள் 138-139

தொழிலாளர் கட்சியின் விவசாய வேலைத்திட்டத்தின் மாற்றம் குறித்து

தொழிலாளர் கட்சியின் விவசாய
வேலைத்திட்டத்தின் மாற்றம் குறித்து
-வி.இ.லெனின்


நமது விவசாய வேலைத்திட்டத்தின் நோக்கங்கள்

சமூக சனநாயகக் கட்சி, சனநாயகப் புரட்சிக்கான காலகட்டத்தில், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அறைகூவி அழைக்க வேண்டும் என்று தெளிவான மற்றும் நேரடியான வடிவத்தில் ஆலோசனையை முன்வைக்க முயன்றோமானால், ரு.ச.ச.தொ. கட்சியின் விவசாயவேலைத்திட்டத்தைப் பற்றியதான கேள்வி, மிகத் தெளிவாக இருந்திருக்கும்.

முதல் அறிவுரையானது, அவசியமானதாக, கீழ்கண்டவாறு இருந்திருக்கும்: ஒவ்வொரு முயற்சியையும், விவசாய எழுச்சியின் முழு வெற்றியைச்
சாதிப்பதற்காகத் தயாரித்தல் வேண்டும். இத்தகைய வெற்றி இன்றி, நிலப்பிரபுக்களிடம் இருந்து “நிலங்களைக் கைப்பற்றுதல்” என்று கறாராக
பேசுவதோ அல்லது உண்மையிலேயே சனநாயகமான அரசினை அமைப்பதோ சாத்தியமற்றதாக இருக்கும். மேலும், விவசாயிகளைக் கலகம் செய்யத்
தூண்டக் கூடிய ஒரே முழக்கமானது: பண்ணை நிலங்கள் அனைத்தும் கைப்பற்றுதல் (மறைமுகமாக ”நஷ்ட ஈடு வழங்குதல்” என்ற கேள்வியினை
ஒதுக்கித் தள்ளக்கூடியவாறு, பொதுவாக அந்நியமாதல் இன்றி அல்லது பொதுவாக உடைமையாளர்களிடமிருந்து கைப்பற்றுதல்) மேலும், அரசியல்
சபையின் கூட்டத்தை நிறுத்தி, உறுதியாக, விவசாயக் கமிடிகள் மூலம் கைப்பற்றுதல்.
வேறு எந்தவிதமான அறிவுரையும் (மாஸ்லோவின் கோஷமான “அந்நியமாதல்” மற்றும் “நகர சபைக்குச் சொந்தமாக்குதல்” என்பதையும் உள்ளிட்டு) புரட்சியின் வழியாக இல்லாமல் எதிர்ப்புரட்சிகர மைய அதிகாரத்துடன், நிலப்பிரபுகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான விவசாய வர்க்கத்துக்கு ஓர் அழைப்பாக இருக்கிறது. புரட்சிகரமான வழியால் இன்றி, அதிகார வழியில், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அழைப்பாக இருக்கிறது: ஏனெனில் புரட்சிகர உழவர் குழுக்களுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்த,   சனநாயகப் பிரதேச மற்றும் ஜெம்ஸ்த்வோ (Zemstoo) அமைப்புக்கள் கூடிய அதிகார வர்க்க மனோபாவம் கொண்டவையாகவே உள்ளன. புரட்சிகர உழவர் குழுக்கள் அங்கேயே, அப்போதே, நிலப்பிரபுக்களுடன் கணக்குத் தீர்த்துக் கொள்கின்றன; பின்பு ஒரு தேசிய  அரசியல் சபை வழங்கப் போகிற அதிகாரத்தை எடுத்துக்
கொள்ளும்.

இரண்டாவது அறிவுரையானது, இன்றியமையாது பின்வருமாறு இருக்கும். அரசியல் அமைப்பு முற்றிலுமாக சனநாயக ரீதியாக அமைக்கப்படாவிடில்,
குடியரசு நிறுவப்படாவிட்டால், உண்மையிலேயே, மக்களின் இறைமை உறுதி செய்யப்படாவிட்டால்,விவசாய எழுச்சியின் மூலம் வென்ற பயன்களைத்
தக்க வைப்பது பற்றியோ அல்லது மேலும் முன்னேறுவது பற்றியோ நினைப்பது பயனற்றதாகும். நாம் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும்,
அனைத்து ஐயங்களையும், பலவாறு அர்த்தம் எடுத்துக் கொள்ளும் நிலையினையும், தவறான வியாக்கி யானங்களையும், எதிர்ப்புரட்சிகர மைய
அதிகாரத்தின் கீழ் நிலப்பிரபுத்துவத்தை அழித்துவிட முடியும் என்ற  கேலிக்குரிய, தெளிவற்ற  எண்ணங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில்,
மிகவும் தெளிவாக,, சிறந்த முறையில், இந்த அறிவுரையை விளக்கிச் சொல்ல வேண்டும். மேலும், இதன் காரணமாக நமது அரசியல் அறிவுரையை
அழுத்திக் கூறுவதில் நாம் விவசாயிகளுக்குச் சொல்ல வேண்டும்; நிலங்களை எடுத்துக் கொண்ட பிறகு, நீங்கள் மேலும் செல்ல வேண்டும்;இல்லையெனில் நீங்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் பெரும் முதலாளிகளால் தோற்கடிக்கப் படுவீர்கள். பலாத்காரமாக பின்தூக்கி எறியப்படுவீர்கள். புதிய அரசியல் இலாபங்களை அடையாமலோ, பொதுவாக நிலங்களின் தனியார் உடைமையின் மீது மேலும் முன்னைவிட பலம் வாய்ந்த அடுத்த
அடியினைத் தொடுக்காமலோ, நாம் நிலங்களை எடுத்துக் கொள்ளவும்,தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது. அரசியலில், சமுதாய வாழ்க்கையின்
அனைத்துப் பகுதியையும் போன்று, நீங்கள் முன் நோக்கித் தள்ளவில்லை என்றால், நீங்கள் பலாத்காரமாக, பின்னால் தூக்கி வீசியெறியப்படுவீர்கள்.
சனநாயகப் புரட்சியின் பின்னர் பலமான முதலாளித்துவ வர்க்கத்தார் (இது இயற்கையாக,  முதலாளித்துவ வர்க்கத்தாரைப் பலம் பொருந்தியதாக
ஆக்குகிறது.) தொழிலாளர்களின், விவசாயிகளின் அனைத்து விதமான அவர்களுடைய லாபங்களைத் திருடிக் கொள்வார்கள்; அல்லது,
தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்களுடைய பாதையில் மேலும் முன்னேறிச் செல்லப் போராடுவார்கள். மேலும், இது ஒரு குடியரசினையும், ஒரு முழுமையான மக்களின் இறைமையையும் குறிக்கிறது. குடியரசு நிறுவப்படுவது முதலாளிய சனநாயகப் புரட்சி சாதிக்கக் கூடிய, அனைத்துப்
பெரும்பாலான நிலங்களைத் தேசிய மயமாக்குதலின், முதலாளிய சனநாயகப் புரட்சியில் இருந்து, சோசலிசத்துக்கு மாறிச்செல்வதற்கான, இயற்கையான மேலும் அவசியமான போராட்டம் ஆரம்பமாவதைக் குறிக்கிறது.

மூன்றாவது மற்றும் கடைசி அறிவுரை; கிராம மற்றும் நகரத் தொழிலாளர்கள் அரைப் பாட்டாளிகள் தனித்தனியாக அமைப்பாகிறார்கள். மிகச் சிறிய,
உழைக்கும் ‘உடைமையாளரை’ உள்ளிட்டு அனைத்து எந்தவிதமான சிறு உடைமையாளர்களையும் நம்பாதீர்கள். விவசாயப் பொருள் உற்பத்தி
நீடிக்கும் வரை, சிறுவீத முதலாளியத்துடன் உறவு கொள்ளாதே. விவசாய எழுச்சியானது வெற்றிக்கு அருகாமையில் இருக்கும் பொழுது, விவசாய
(நில) முதலாளி, தொழிலாளிகளுக்கு அவர்களுடைய சுதந்திரமான அமைப்பைப் பெறுவது அவசியமானதாக இருக்கிறது; மேலும், மேலும் கடுமையாக, விடாமுயற்சியுடன், தீர்மானகரமாக உரக்க, நாம் சோசலிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுக்க வேண்டாமா? விவசாய இயக்கத்தின் முடிவுவரை, நாம் அதன் அருகில் நிற்கிறோம்; ஆனால், சோசலிஷப் புரட்சியைக் கொண்டுவராத மேலும் கொண்டுவர முடியாத, பிரிதொரு வர்க்கத்தின் இயக்கம் என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக, பொருளாதார நடவடிக்கையின் கடமையான நில விநியோகம் பற்றி என்ன செய்யப்பட வேண்டும் என்ற கேள்வியின் பக்கமாய் நிற்கின்றோம். முதலாளித்துவ சமுகத்தில் இந்தப் பிரச்சனை சிறிய மற்றும் பெரிய முதலாளீகளால் தீர்மானிக்கப்படும்; மேலும் தீர்க்கப்பட முடியும். நாம் இதில் அதிகமான ஆர்வம் காட்டுவது எதுவெனில்; (மேலும், பிரத்தியேகமாக, விவசாய எழுச்சிக்குப் பின்) கிராமப்புற பாட்டாளிகள் செய்ய வேண்டியது என்ன? சமப்படுத்தப்பட்ட நில உரிமை மேலும் இவை போன்வோம்றவற்றைப்
புனைவதற்குக் குட்டிமுதலாளிய சித்தாந்திகளிடம் இதை ஒப்படைத்துவிட்டு நாம், இந்தக் கேள்விபற்றியே முக்கியமான அக்கறை காட்டுகிறோம்;
காட்டு வோம்; தொடர்பு கொள்வோம். புதிய முதலாளிய சனநாயக ருஷ்யாவின், அடிப்படையான இக் கேள்விக்கு நமது பதில்; கிராமப் புறப்
பாட்டாளிகள், நகரப்புறப் பாட்டாளிகளுடன், சோசலிசப் புரட்சி முழுமை பெறுவதற்காகப் போராடுவதற்குக் கிராமப்புறப் பாட்டாளிகள் அமைப்பு ரீதியாகத் தனியாகவும் நகரப்புறப் பாட்டாளிகளுடனும் ஒன்று சேர வேண்டும்.
எனவே நமது விவசாய வேலைத்திட்டம் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முதலாவது, நிலப்பிரபுத்துவத்தின் மீது
புரட்சிகர விவசாயத் தாக்குதலுக்கான, மிக அழுத்தமான அறைகூவலைத் தெளிவாகக் கூறுதல். இரண்டாவது, அடுத்த நடவடிக்கைப் பற்றிய
நுணுக்கமான வரையறை; விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும், சனநாயகத்தின் வெற்றியிலிருந்து, சோசலிசத்திக்காக, நேரடியான
பாட்டாளிவர்க்கப் போராட்டத்திற்கும், இயக்கம் நடத்த முடியும்; நடத்த வேண்டும். மூன்றாவது, விவசாயி எழுச்சியின் காரணமாக அருகில் நெருங்குகிற மிகவும் அவசரமாக நம்முடன் மோதுகிற மேலும், உறுதியாக ஒரு தெளிவான திட்டத்தை வகுக்கக் கோருகின்ற கட்சியினது, பாடாளிவர்க்க
நோக்கங்களைப் பற்றிய ஒரு குறிப்புரை. 

(சமரன் தொகுப்பு பக்கங்கள்:124-127)