Tuesday 7 February 2012

தொழிலாளர் கட்சியின் விவசாய வேலைத்திட்டத்தின் மாற்றம் குறித்து

தொழிலாளர் கட்சியின் விவசாய
வேலைத்திட்டத்தின் மாற்றம் குறித்து
-வி.இ.லெனின்


நமது விவசாய வேலைத்திட்டத்தின் நோக்கங்கள்

சமூக சனநாயகக் கட்சி, சனநாயகப் புரட்சிக்கான காலகட்டத்தில், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அறைகூவி அழைக்க வேண்டும் என்று தெளிவான மற்றும் நேரடியான வடிவத்தில் ஆலோசனையை முன்வைக்க முயன்றோமானால், ரு.ச.ச.தொ. கட்சியின் விவசாயவேலைத்திட்டத்தைப் பற்றியதான கேள்வி, மிகத் தெளிவாக இருந்திருக்கும்.

முதல் அறிவுரையானது, அவசியமானதாக, கீழ்கண்டவாறு இருந்திருக்கும்: ஒவ்வொரு முயற்சியையும், விவசாய எழுச்சியின் முழு வெற்றியைச்
சாதிப்பதற்காகத் தயாரித்தல் வேண்டும். இத்தகைய வெற்றி இன்றி, நிலப்பிரபுக்களிடம் இருந்து “நிலங்களைக் கைப்பற்றுதல்” என்று கறாராக
பேசுவதோ அல்லது உண்மையிலேயே சனநாயகமான அரசினை அமைப்பதோ சாத்தியமற்றதாக இருக்கும். மேலும், விவசாயிகளைக் கலகம் செய்யத்
தூண்டக் கூடிய ஒரே முழக்கமானது: பண்ணை நிலங்கள் அனைத்தும் கைப்பற்றுதல் (மறைமுகமாக ”நஷ்ட ஈடு வழங்குதல்” என்ற கேள்வியினை
ஒதுக்கித் தள்ளக்கூடியவாறு, பொதுவாக அந்நியமாதல் இன்றி அல்லது பொதுவாக உடைமையாளர்களிடமிருந்து கைப்பற்றுதல்) மேலும், அரசியல்
சபையின் கூட்டத்தை நிறுத்தி, உறுதியாக, விவசாயக் கமிடிகள் மூலம் கைப்பற்றுதல்.
வேறு எந்தவிதமான அறிவுரையும் (மாஸ்லோவின் கோஷமான “அந்நியமாதல்” மற்றும் “நகர சபைக்குச் சொந்தமாக்குதல்” என்பதையும் உள்ளிட்டு) புரட்சியின் வழியாக இல்லாமல் எதிர்ப்புரட்சிகர மைய அதிகாரத்துடன், நிலப்பிரபுகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான விவசாய வர்க்கத்துக்கு ஓர் அழைப்பாக இருக்கிறது. புரட்சிகரமான வழியால் இன்றி, அதிகார வழியில், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அழைப்பாக இருக்கிறது: ஏனெனில் புரட்சிகர உழவர் குழுக்களுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்த,   சனநாயகப் பிரதேச மற்றும் ஜெம்ஸ்த்வோ (Zemstoo) அமைப்புக்கள் கூடிய அதிகார வர்க்க மனோபாவம் கொண்டவையாகவே உள்ளன. புரட்சிகர உழவர் குழுக்கள் அங்கேயே, அப்போதே, நிலப்பிரபுக்களுடன் கணக்குத் தீர்த்துக் கொள்கின்றன; பின்பு ஒரு தேசிய  அரசியல் சபை வழங்கப் போகிற அதிகாரத்தை எடுத்துக்
கொள்ளும்.

இரண்டாவது அறிவுரையானது, இன்றியமையாது பின்வருமாறு இருக்கும். அரசியல் அமைப்பு முற்றிலுமாக சனநாயக ரீதியாக அமைக்கப்படாவிடில்,
குடியரசு நிறுவப்படாவிட்டால், உண்மையிலேயே, மக்களின் இறைமை உறுதி செய்யப்படாவிட்டால்,விவசாய எழுச்சியின் மூலம் வென்ற பயன்களைத்
தக்க வைப்பது பற்றியோ அல்லது மேலும் முன்னேறுவது பற்றியோ நினைப்பது பயனற்றதாகும். நாம் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும்,
அனைத்து ஐயங்களையும், பலவாறு அர்த்தம் எடுத்துக் கொள்ளும் நிலையினையும், தவறான வியாக்கி யானங்களையும், எதிர்ப்புரட்சிகர மைய
அதிகாரத்தின் கீழ் நிலப்பிரபுத்துவத்தை அழித்துவிட முடியும் என்ற  கேலிக்குரிய, தெளிவற்ற  எண்ணங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில்,
மிகவும் தெளிவாக,, சிறந்த முறையில், இந்த அறிவுரையை விளக்கிச் சொல்ல வேண்டும். மேலும், இதன் காரணமாக நமது அரசியல் அறிவுரையை
அழுத்திக் கூறுவதில் நாம் விவசாயிகளுக்குச் சொல்ல வேண்டும்; நிலங்களை எடுத்துக் கொண்ட பிறகு, நீங்கள் மேலும் செல்ல வேண்டும்;இல்லையெனில் நீங்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் பெரும் முதலாளிகளால் தோற்கடிக்கப் படுவீர்கள். பலாத்காரமாக பின்தூக்கி எறியப்படுவீர்கள். புதிய அரசியல் இலாபங்களை அடையாமலோ, பொதுவாக நிலங்களின் தனியார் உடைமையின் மீது மேலும் முன்னைவிட பலம் வாய்ந்த அடுத்த
அடியினைத் தொடுக்காமலோ, நாம் நிலங்களை எடுத்துக் கொள்ளவும்,தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது. அரசியலில், சமுதாய வாழ்க்கையின்
அனைத்துப் பகுதியையும் போன்று, நீங்கள் முன் நோக்கித் தள்ளவில்லை என்றால், நீங்கள் பலாத்காரமாக, பின்னால் தூக்கி வீசியெறியப்படுவீர்கள்.
சனநாயகப் புரட்சியின் பின்னர் பலமான முதலாளித்துவ வர்க்கத்தார் (இது இயற்கையாக,  முதலாளித்துவ வர்க்கத்தாரைப் பலம் பொருந்தியதாக
ஆக்குகிறது.) தொழிலாளர்களின், விவசாயிகளின் அனைத்து விதமான அவர்களுடைய லாபங்களைத் திருடிக் கொள்வார்கள்; அல்லது,
தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்களுடைய பாதையில் மேலும் முன்னேறிச் செல்லப் போராடுவார்கள். மேலும், இது ஒரு குடியரசினையும், ஒரு முழுமையான மக்களின் இறைமையையும் குறிக்கிறது. குடியரசு நிறுவப்படுவது முதலாளிய சனநாயகப் புரட்சி சாதிக்கக் கூடிய, அனைத்துப்
பெரும்பாலான நிலங்களைத் தேசிய மயமாக்குதலின், முதலாளிய சனநாயகப் புரட்சியில் இருந்து, சோசலிசத்துக்கு மாறிச்செல்வதற்கான, இயற்கையான மேலும் அவசியமான போராட்டம் ஆரம்பமாவதைக் குறிக்கிறது.

மூன்றாவது மற்றும் கடைசி அறிவுரை; கிராம மற்றும் நகரத் தொழிலாளர்கள் அரைப் பாட்டாளிகள் தனித்தனியாக அமைப்பாகிறார்கள். மிகச் சிறிய,
உழைக்கும் ‘உடைமையாளரை’ உள்ளிட்டு அனைத்து எந்தவிதமான சிறு உடைமையாளர்களையும் நம்பாதீர்கள். விவசாயப் பொருள் உற்பத்தி
நீடிக்கும் வரை, சிறுவீத முதலாளியத்துடன் உறவு கொள்ளாதே. விவசாய எழுச்சியானது வெற்றிக்கு அருகாமையில் இருக்கும் பொழுது, விவசாய
(நில) முதலாளி, தொழிலாளிகளுக்கு அவர்களுடைய சுதந்திரமான அமைப்பைப் பெறுவது அவசியமானதாக இருக்கிறது; மேலும், மேலும் கடுமையாக, விடாமுயற்சியுடன், தீர்மானகரமாக உரக்க, நாம் சோசலிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுக்க வேண்டாமா? விவசாய இயக்கத்தின் முடிவுவரை, நாம் அதன் அருகில் நிற்கிறோம்; ஆனால், சோசலிஷப் புரட்சியைக் கொண்டுவராத மேலும் கொண்டுவர முடியாத, பிரிதொரு வர்க்கத்தின் இயக்கம் என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக, பொருளாதார நடவடிக்கையின் கடமையான நில விநியோகம் பற்றி என்ன செய்யப்பட வேண்டும் என்ற கேள்வியின் பக்கமாய் நிற்கின்றோம். முதலாளித்துவ சமுகத்தில் இந்தப் பிரச்சனை சிறிய மற்றும் பெரிய முதலாளீகளால் தீர்மானிக்கப்படும்; மேலும் தீர்க்கப்பட முடியும். நாம் இதில் அதிகமான ஆர்வம் காட்டுவது எதுவெனில்; (மேலும், பிரத்தியேகமாக, விவசாய எழுச்சிக்குப் பின்) கிராமப்புற பாட்டாளிகள் செய்ய வேண்டியது என்ன? சமப்படுத்தப்பட்ட நில உரிமை மேலும் இவை போன்வோம்றவற்றைப்
புனைவதற்குக் குட்டிமுதலாளிய சித்தாந்திகளிடம் இதை ஒப்படைத்துவிட்டு நாம், இந்தக் கேள்விபற்றியே முக்கியமான அக்கறை காட்டுகிறோம்;
காட்டு வோம்; தொடர்பு கொள்வோம். புதிய முதலாளிய சனநாயக ருஷ்யாவின், அடிப்படையான இக் கேள்விக்கு நமது பதில்; கிராமப் புறப்
பாட்டாளிகள், நகரப்புறப் பாட்டாளிகளுடன், சோசலிசப் புரட்சி முழுமை பெறுவதற்காகப் போராடுவதற்குக் கிராமப்புறப் பாட்டாளிகள் அமைப்பு ரீதியாகத் தனியாகவும் நகரப்புறப் பாட்டாளிகளுடனும் ஒன்று சேர வேண்டும்.
எனவே நமது விவசாய வேலைத்திட்டம் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முதலாவது, நிலப்பிரபுத்துவத்தின் மீது
புரட்சிகர விவசாயத் தாக்குதலுக்கான, மிக அழுத்தமான அறைகூவலைத் தெளிவாகக் கூறுதல். இரண்டாவது, அடுத்த நடவடிக்கைப் பற்றிய
நுணுக்கமான வரையறை; விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும், சனநாயகத்தின் வெற்றியிலிருந்து, சோசலிசத்திக்காக, நேரடியான
பாட்டாளிவர்க்கப் போராட்டத்திற்கும், இயக்கம் நடத்த முடியும்; நடத்த வேண்டும். மூன்றாவது, விவசாயி எழுச்சியின் காரணமாக அருகில் நெருங்குகிற மிகவும் அவசரமாக நம்முடன் மோதுகிற மேலும், உறுதியாக ஒரு தெளிவான திட்டத்தை வகுக்கக் கோருகின்ற கட்சியினது, பாடாளிவர்க்க
நோக்கங்களைப் பற்றிய ஒரு குறிப்புரை. 

(சமரன் தொகுப்பு பக்கங்கள்:124-127) 

No comments:

Post a Comment