Tuesday 7 February 2012

போல்ஷெவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா? வி.ஐ.லெனின்


போல்ஷெவிக்குகள் அரச அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
(போல்ஷெவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா?)


-வி.இ.லெனின்

சோவியத்துக்கள் ஒரு புதிய அரசுக் கருவி ஆகும்;

இது, முதலாவதாக, ஆயுதந்தாங்கிய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் படையை அளிக்கிறது; பழைய நிலையான படையைப் போன்று இப்படை மக்களிடமிருந்து விலகி நிற்பதல்ல. ஆனால் மக்களோடு மிகவும் நெருக்கமாகக் கட்டுப்பட்டு இருக்கிறது. இராணுவ நிலையிலிருந்து நோக்கினால் இப்படை பழைய படைகளோடு ஒப்பிட முடியாத  அளவுக்கு அதிக ஆற்றலுடையதாக இருக்கிறது; புரட்சியின் நிலையிலிருந்து நோக்கினால் இப்படையினிடத்தில் வேறு எதையும் வைக்க முடியாது.

இரண்டாவதாக, இக்கருவி மக்களோடு, பெரும்பான்மையான மக்களோடு ஒரு பிணைப்பைத் தருகிறது;  இப்பிணைப்புப் போன்ற ஒன்று- மிகவும் குறைந்த அம்சங்களில் ஒத்திருப்பதாகக் கூட – பழைய அரசுக் கருவியில் இருந்திராத அளவுக்கு நெருக்கமாகவும் கலைக்க முடியாத படியும், அவ்வளவு எளிமையாக நிரூபிக்கத்தக்கதாகவும் புதுப்பிக்கத்தக்கதாகவும் இருந்ததில்லை.

மூன்றாவதாக, இந்தக் கருவியின் ஆட்களை மக்களே தேர்தெடுக்கிறார்கள்;  மக்கள் விரும்புகின்ற போது அதிகார வர்க்க முறைகள் ஏதுமின்றித் திரும்ப அழைத்துக் கொள்ள முடியும்; இந்தக் காரணத்தால் இது பழைய அரசு வடிவங்களை விட மேலதிக சனநாயகத் தன்மையுடையது.

நான்காவதாக, மிகவும் பல்வேறுபட்ட தொழில்களுடன் ஒரு நெருங்கிய தொடர்பை இது அளிக்கிறது; அப்படியே சிவப்புநாடா முறை இல்லாமல் பலதரப்பட்டதும் மிகவும் புரட்சிகரமானதுமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கிறது.

ஐந்தாவதாக, முன்னணியினருக்கு, அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிலும், தொழிலாளிகளிலும், உழவர்களிலும் உள்ள, மிக மிக வர்க்க உணர்வு பெற்ற, மிக மிக ஆற்றல் பெற்ற, மிகமிக முற்போக்கான பிரிவினர்க்கு ஓர் அமைப்பு ரீதியான வடிவத்தை அது கொடுக்கிறது; அதனால் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் முன்னணியினர் இவ்வர்க்கங்கள் முழுவதன் பரந்த மக்களை மேலே தூக்கிவிடவும், பயிற்சியளிக்கவும், வழிநடத்திச் செல்லவும் உதவக் கூடிய ஒரு கருவியாக அது அமைகிறது. இவ்வர்க்கங்களின் பரந்த மக்கள் பிரிவினர் இதுவரை அரசியல் வாழ்விலிருந்தும் வரலாற்றிலிருந்தும் முற்றிலும் வெளியே ஒதுங்கி நிற்கின்றனர்.

ஆறாவதாக, பாராளுமன்ற முறையின் நற்பயன்களை உடனடி மற்றும்  நேரடி சனநாயகத்தின் நற்பயன்களுடன், அதாவது மக்கள் தேர்தெடுத்த சார்பாளர்களிடம் சட்டச் செயற்பாடுகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை ஒன்று சேர்க்க வாய்ப்பளிக்கிக்றது. பூர்ஷ்வா பாராளுமன்ற முறையுடன் ஒப்பிடும்போது, இது சனநாயக மேம்பாட்டில் ஒரு முன்னோக்கிய அடியாகும்; இது உலகளாவிய வரலாற்று ரீதியான முக்கியத்துவம் உடையதாகும்.

No comments:

Post a Comment