Monday 14 November 2011

மாவோவின் மேற்கோள்கள்


மாவோவின் மேற்கோள்கள்

பொருளியல் அடிதளமும் மேற்கட்டுமானமும்
      ஏகாதிபத்திய வல்லரசுகள் சீனாவில் தங்களுடைய ஆட்சிக்கான முக்கிய ஆதார ஊன்றுகோல்களாக நிலப்பிரபுத்துவ நிலவுடைமை வர்க்கத்தையும், தரகு முதலாளிய வர்க்கத்தையும் ஆக்கிவிட்டனர்.ஏகாதிபத்தியம் முதலில் பழைய சமூக அமைப்பின் ஆளும் மேல்தட்டுடனும், நிலப்பிரபுக்களுடனும், வணிக மற்றும் வட்டித்தொழில் உரிமையாளர்களுடனும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராகக் கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. அதன் பிற்போக்குக் கூட்டாளிகளை நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக விளங்குகின்ற முதலாளியத்துக்கு  முக்கிய சுரண்டல் வடிவங்கள் அனைத்தையும் (குறிப்பாக கிராமங்களில்) பாதுகாக்கவும், நீடித்திருக்கச் செய்யவும் எல்லா இடங்களிலும் ஏகாதிபத்தியம் முயற்சி செய்கிறது. ஏகாதிபத்தியம் தனது எல்லா நிதிமூலதன மற்றும் இராணுவ வலிமையுடன் சீனாவிலுள்ள நிலப்பிரபுத்துவ  மிச்சசொச்சங்களை அவற்றின் அதிகாரவர்க்க மற்றும் இராணுவ மேற்கடுமானங்கள் முழுவதுடனும் ஆதரித்து, ஊக்குவித்து, ஊட்டிவளர்த்து, நீடித்திருக்கச் செய்கிற  முக்கிய சக்தியாக உள்ளது.
இலக்குகளும் சக்திகளை (Force) கையாளுதலும்
 சீனச் சமுதாயம் குடியேற்ற (Colonial) அரைக் குடியேற்ற மற்றும் அரை நிலவுடைமையதாக இருப்பதாலும், புரட்சியின் இலக்குகள் முக்கியமாக அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியாகவும் உள்நாட்டு நிலப்பிரபுத்துவமாக இருப்பதாலும், புரட்சியின் கடமைகள் இந்த இரண்டு ஒடுக்குமுறையாளர்களையும் தூக்கி எறிவதாக இருப்பதாலும், சீனச் சமுதாயத்திலிருக்கிற பல்வேறு வர்க்கங்கள் மற்றும் சமுகத்தட்டுக்களில் எந்த வர்க்கங்கள் அல்லது தட்டுக்கள் அந்த ஒடுக்குமுறையாளர்களுடன் சண்டையிட வல்ல சக்திகளாக அமைய முடியும்? இந்தக் காலகட்டத்தில் சீனப் புரட்சியின் இயக்குவிசைகள் (Motive Forces) பற்றிய கேள்வி இதுவேயாகும். சீனப்புரட்சியின் அடிப்படைச் செயல்தந்திரம் பற்றிய பிரச்சனைக்கான சரியான தீர்வை அடைவதற்கு இந்தக் கேள்வியைத் தெளிவாகப் புரிந்து கொள்வது தவிர்க்க இயலாததாகும்.
இன்றைய சீனச் சமுதாயத்திலுள்ள வர்க்கங்கள் யாவை?  சீனச் சமுதாயத்திலுள்ள ஆளும் வர்க்கங்களாக நிலப்பிரபு வர்க்கமும், உடைமையாளரின்   (Bourgeoisie) மேல்தட்டுகளும் அமைகின்றன. பாட்டாளிகள், உழவர்கள் (Peasentry), உழவர்கள் தவிர மீதியுள்ள (குட்டிமுதலாளி) சிறு உடைமையாளர்களின் வெவ்வேறு பகுதியினர் ஆகியோர் சீனாவின் பரந்த பகுதிகளில் ஆளப்படும் குடிபடைகளாக இன்னமும் உள்ளனர்.
     சீனப்புரட்சியின்பால் இந்த வர்க்கங்களின் நோக்கும் நிலையும், அவை சமுதாயத்தில் வகிக்கின்ற பொருளியல் தரத் (Status) தால் தான் முழுக்க முழுக்கத் தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வாறாக, புரட்சியின் இயக்கு விசைகளும், இலக்குகளும், கடமைகளும் சீனாவின் சமூகப் பொருளியல் அமைப்பால் தீர்மானிக்கப்படுதின்றன.
================================================================                             
இவ்வாறாக, சீனாவின் முதலாளிய (பூர்க்ஷ்வா) சனநாயகப் புரட்சியில் பாட்டாளிகள், உழவர்கள், மற்றும் சிறு உடைமையாளர்களின் பிற பிரிவுகளது பங்கை-அது போராட்டத்திற்குச் சக்திகளை ஒருங்கமைப்பதிலாகட்டும் (அதாவது ஐக்கிய முன்னணியில்) அல்லது அரசு அதிகாரத்தை நிறுவுவதிலாகட்டும்- புறக்கணிக்க முடியாது. இந்த வர்க்கங்களை ஒதுக்கிவிட முயல்கிற எவராலும் சீனத் தேசத் தலைவிதிப் பிரச்சனையையோ அல்லது சீனாவின் வேறெந்தப் பிரச்சனையையோ தீர்க்க முடியாது. இந்தக் காலக்கட்டத்தில் சீனப்புரட்சி, உழைப்பாளர்கள், உழவர்கள், சிறு உடைமையாளர்களின் பிற பிரிவுகள் ஆகியோர் திண்ணமான ஒரு இடத்தையும், திண்ணமான ஒரு பாத்திரத்தையும், வகிக்கக் கூடிய சனநாயகக் குடியரசை உருவாக்க கடும் முயற்சி செய்ய வேண்டும். வேறு சொற்களில் கூறினால், உழைப்பாளர்கள், உழவர்கள், நகர்ப்புற சிறு உடைமையாளர்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்க்கின்ற பிற அனைவருடனுமான புரட்சிகரக் கூட்டணியின் மேல் எழுந்த  ஒரு சனநாயகக் குடியரசாக அது இருக்க வேண்டும். பாட்டாளிவர்க்கத் தலைமையின் கீழ்தான் அத்தகைய குடியரசை முழுமௌயாக அமைக்க முடியும்.
  (மேலே கண்ட மேற்கோள்கள் ‘சீனப்புரட்சியும் சீனப் பொதுவுடைமைக் கட்சியும்’ (தொகுதி11 பக்கம் 312) என்பதிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்)

இராணுவ மற்றும் அரசியல் செயல்தந்திரங்கள்
எல்லாப் பிரச்சனைகளையும் பகுத்தாய வேண்டும்; ஒவ்வொன்றையும் மறுத்தொதுக்கலாகாது. எடுத்துக் காடாக, நான்காவது பிளீனரி (Plenary-நிறைந்த, முழுமையான) கூட்ட அமர்விலிருந்து சுன்யி (Tsynyi) கூட்டம் வரையிலான காலத்தின் போது மையத் தலைமையின் வழி பற்றிய பிரச்சனையை இரண்டு சிறப்பியல்புகளிலிருந்து பகுத்து ஆராய வேண்டும்.
      ஒருபுறம், அந்தக் காலத்தில் மையத்தலைமை அமைப்புக் கடைப்பிடித்த அரசியல் செயல்தந்திரம் இராணுவச் செயல்தந்திரம் மற்றுமூழியர் கொள்கை ஆகியவை அவற்றின் தலையாய அம்சங்களில் தவறு என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்; ஆனால்  மறுபுறம், சியாங்-கை-க்ஷேக்கை எதிர்த்தல், விவசாயப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லுதல், செம்படைப் போராட்டம் போன்ற  அடிப்படைப் பிரச்சனைகளில் நமக்கும், தவறுகளைச் செய்த தோழர்களுக்கும் இடையில் எந்தவொரு சச்சரவும் இல்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
‘நமது படிப்பும், இப்போதைய நிலைமையும்,
(Our study and the current situation)
என்பதிலிருந்து, மாவோ 111 பக். 64
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்   
செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு           
லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 111 – 113

No comments:

Post a Comment