Monday, 14 November 2011

சமூக சனநாயகத்தின் விவசாய வேலைத்திட்டம் வி.இ.லெனின்

சமூக சனநாயகத்தின்
விவசாய வேலைத்திட்டம்
வி.இ.லெனின்
  முதலாளிய விவசாயப் பரிணாம வளர்ச்சியின் இரு வகைகளைத் தொடர்வோம். முதலாளி வர்க்கத்துக்கு எதிராக சோசலிசப் போராட்ட நிலையில் இருந்து காணும் பொழுது கேலிக்குரியதாகவும், எதிர்ப்புரட்சிகரமானதாகவும் இருக்கும் நரோத்னிக் கொள்கைகள், அடிமைத் தனத்துக்கு எதிரான  முதலாளியப் போராட்டத்தில் விவேகமுள்ளதாகவும், (குறிப்பான வரலாற்றுக் கடமையைக் கொண்டிருக்கிற அர்த்தத்தில்) முன்னேற்றகரமானதாகவும் இருக்கிறது என நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இப்பொழுது, கேள்வி எழுகிறது; அடிமைத்தனமானது, தவிர்க்க இயலாதவாறு, ருக்ஷ்ய நிலவுடைமையில், முழுமையான ருக்ஷ்ய சமூக அமைப்பில், இறந்து படும் என நாம் கூறும் பொழுது, இத்தகைய மாற்றம், ஒரே குறிப்பிட்ட வடிவில் நிகழும் என்று இது இருக்கிறதா? அல்லது பல வடிவங்களுக்கு வாய்ப்பு உள்ளதா?
  நமது புரட்சி, மற்றும் சமூக சனநாயக விவசாய வேலைத்திட்டம் இவற்றின் மீது சரியான நிலைப்பாடுகளை வந்தடைவதில், இந்தக் கேள்வியானது, உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தப் பிரச்சனையை நாம் தீர்த்தாக வேண்டும் அதற்கு, நாம் புரட்சியின் பொருளாதார அடிப்படை சம்பந்தமான விவரங்களிலிருந்து தொடங்க வேண்டும்.ருக்ஷ்யாவில் அடிமைத்தனம் பிழைத்திருப்பதற்கு மிகவும் தெளிவாக உருக் கொடுக்கக் கூடிய, வலிமை வாய்ந்த முக்கிய ஆதாரமான நிலப் பிரபுத்துவம்தான் போராட்டத்தின் முக்கிய மையமாக இருக்கிறது. சந்தைப் பொருள் உற்பத்தி,  முதலாளித்துவம் இவற்றின் வளர்ச்சி, அத்தகைய மிச்ச சொச்சங்களை தவிர்க்க இயலாதவாறு ஒரு முடிவுக்குக் கொண்டு வரும். இந்த வகையில், ருக்ஷ்யாவின் முன் ஒரே ஒரு வழிதான் உள்ளது; அது அதன் முதலாளித்துவ வளர்ச்சியாகும்.
    ஆனால், அத்தகைய வளர்ச்சிக்கு இரு வடிவங்கள் இருக்கலாம். அடிமைத்தனத்தின் உயிர் பிழைத்தல் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தின் தன்மையினை மாற்றி அமைப்பதின் மூலமோ, அல்லது நிலப் பிரபுத்துவத்தை அழிப்பதின் காரணனமாகவோ அல்லது சீர்திருத்தத்தின் மூலமாகவோ அல்லது புரட்சியின் மூலமாகவோ தோல்வியினைத் தழுவலாம். முதலாளித்துவ வளர்ச்சி படிப்படியாக முதலாளித்துவ மயமாக மாறுகின்ற, மேலும் படிப்படியாக நிலப் பிரபுத்துவ சுரண்டல் முறைக்கு மாற்றீடாக முதலாளித்துவ சுரண்டலை வைக்கின்ற, பெரும் நிலப் பிரபுத்துவ பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதன் மூலம் தொடரலாம். புரட்சிகரமான முறையில். சமுதாய உயிரியில் இருந்து, நிலப் பிரபுத்துவ கழிவுகளை வெளியேற்றக் கூடிய சிறுவிவசாயப் பொருளாதாரத்தை முன் வைப்பதன் மூலம் தொடரலாம். மேலும்,இதன் பின் முதலாளித்துவமானது, இவை இன்றியே முதலாளித்துவப் பொருளாதாரப் பாதையினூடே முன்னேறும்.
முதலாளித்துவ வளர்ச்சிக்கு, “புறவயமாகச் சாத்தியமான” அந்த இரு வழிகளை,  “பிரக்ஷ்யன் பாதை” ‘அமெரிக்கர் பாதை” என்று அழைக்கலாம். முதல் நிகழ்ச்சியில், விவசாயிகளைத் தலைமுறை தலைமுறையாக, கொடூரமான சுரண்டலுக்கும், கொத்தடிமைத் தனத்துக்கும் உட்படுத்திய, நிலப்பிரபுத்துவ பண்ணைப் பொருளாதாரம், முதலாளித்துவ, ஜங்கர் பண்ணைப் பொருளாதாரமாக வளர்ச்சியடைகிறது. அதே சமயத்தில், ஒரு குறுகிய,  சிறுபான்மையான,  ரோஸ்பாரன் (Roos bauron) (பெரும் விவசாயிகள்) உதித்தனர். இரண்டாவது நிகழ்வில், பண்ணைகளின் பொருளாதார அமைப்பு இல்லை; அல்லது, நிலப் பிரபுத்துவப் பண்ணைகளைக் கைப்பற்றிப் பிளக்கும் புரட்சியால் அது நொறுக்கப்படுகிறது. இந்த நிகழ்வில், விவசாயி ஆதிக்கம் செலுத்துகிறார்; விவசாயத்தின், முழு காரியஸ்தனாக மாறுகிறார்; மேலும், முதலாளிய விவசாயியாகப் பரிணமிக்கிறார். முதல் நிகழ்வில், நிலப் பிரபுத்துவக் கொத்தடிமைத்தனத்தை, அடிமைத்தனமாக மாற்றுவதிலும், நிலப்பிரபுத்துவ பண்ணை நிலங்களில் முதலாளித்துவ சுரண்டல் முறையை – ஜக்கர்கள்- நிறுவுவதும், அதன் பரிமாணத்தின் முக்கிய விவசாயமாக இருக்கிறது. இரண்டாவது நிகழ்வில், அதன் முக்கிய பின்புலம் குறிப்பிட்ட விவசாயியை, முதலாளிய விவசாயியாக மாற்றுவதில் உள்ளது.
  ருக்ஷ்யப் பொருளாதார வரலாற்றில், இத்தகைய இரு பரிணாம வகைகளும், தெளிவான சான்றுகளோடு உள்ளன. அடிமைத்தன வீழ்ச்சிக் கால கட்டத்தை எடுத்துக் கொள்வோம். சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் வழிமுறையில், நிலப் பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்தேறியுள்ளது. இரண்டு வர்க்கமுமே, முதலாளியப் பொருளாதார வளர்ச்சி நிலைமைகளுக்காக நின்றன. (அதைப் பற்றிய கவனமின்மை இல்லாமலே) ஆயின், நிலப்பிரபுத்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவப் பொருளாதாரத்தை, நிலப்பிரபுத்துவ வரிமுறைகளை, நிலப்பிரபுத்துவச் சுரண்டல் முறைகளைக் (கொத்தடிமைத்தனம்) கூடிய மட்டும் பாதுகாக்கின்ற  ஒரு வளர்ச்சியை விரும்பியது. விவசாய வர்க்கமானது, நிலவுகின்ற விவசாய நிலைமைகளுடன், விவசாயிகளின் உயர்ந்த செழிப்பான வாழ்க்கைத் தரச் சாத்தியப்பாடுகளை உத்திரவாதம் செய்யும், நிலப்பிரபுத்துவத்தை அழிக்கும், அனைத்து அடிமைத்தன மற்றும் கொத்தடிமைத்தனச் சுரண்டலை ஒழிக்கும், ஒரு வளர்ச்சியை விரும்பியது. “விவசாயச் சீர்த்திருத்ததிற்கு” நிலப்பிரபுக்கள் கையாண்ட முறையினைவிட, இரண்டாவது வழிமுறையில் தான், முதலாளிய வளர்ச்சி மற்றும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மிகவும் விரிந்த அளவிலும், மேலும் மிகுந்த வேகமான முறையிலும் இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மார்க்சியத்துக்கு எதிரான நரோத்னிக்குகளைப் போன்ற, கேலிச்சித்திர மார்க்சியவாதிகள்தான், 1861-இல் நிலத்திலிருந்து விவசாயி தனிமைப்படுத்தப்பட்டது முதலாளிய வளர்ச்சிக்கு உத்திரவாதமளிக்கிறது என நம்பி, அதைச் சித்திரமாக வரைகின்றனர். இதற்கு மாறாக, இது கொத்தடிமைத்தனத்தின் உத்திரவாதமாக- ஆகையினால்,  உண்மையிலேயே, ஓர் உத்திரவாதமாக மாறியது- இருந்திருக்கும்; அதாவது, இன்னும் அரை அடிமை-குத்தகைப் பண்ணை முறை மற்றும் உழைப்புக் குத்தகை அதாவது கூலியில்லா வேலைப் பொருளாதாரம் இருந்திருக்கும். விவசாயிகளின், நிலப்பிரபுக்களின் நலன்களுக்கு இடையேயான முரண்பாடானது, “மக்களின் உற்பத்தி” “தொழிலாளர் கொள்கை” ஆகியவற்றால் முதலாளிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராக இருக்கவில்லை. (நமது நரோத்னிக்குகள் இது இப்படி இருக்குமென கற்பனை செய்திருப்பதைப் போன்று) இது, அமெரிக்க மாதிரி முதலாளிய வளர்ச்சிக்காக, பிரக்ஷ்யா மாதிரி முதலாளிய வளர்ச்சியை எதிர்த்த போராடமாகவே இருந்தது.
  அடிமைத்தனம் நிலவாத, விவசாயம் முற்றிலுமாக, பிரதானமாக, “சுதந்திர விவசாயிகளால்” எடுத்துக் கொள்ளப்பட்ட, அத்தகைய ருக்ஷ்யப் பகுதிகளில் (உதாரணமாக, சீர்திருத்தத்துக்குப் பின் காலனியாக்கப்பட்ட பிரான்ஸ், வோல்கா,ஸ்டெப்பிப் பகுதி, நோவோரோஸியா, வடக்கு காகஸ்ல் பகுதிகள்)  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும், முதலாளித்துவத்தின் முன்னேற்றமும், அடிமைத்தனத்தின் மிச்ச மீதங்களால் அழுத்தப்பட்ட மத்திய பகுதிகளை விட முகவும் வேகமாக இருந்தன.
                ருக்ஷ்யவின் விவசாய மையம் மற்றும் விவசாய எல்லைப்புற நிலங்கள்,நமக்குக் காட்டுவதைப் போன்றே, அந்தப் பகுதிகளின் வெளி (Spatial) அல்லது  பூகோள ரீதியான பரிணாமம்,ஒன்று அல்லது மற்றைய வகையில் விவசாய பரிணாமம் வழக்கிலிருக்கிறது எனவும், நிலப்பிரபுத்துவ மற்றும் விவசாய பண்ணை முறை அடுத்தடுத்து நிலவுகின்ற அந்தப் பகுதிகளில், இரண்டு வகையான பரிணாமங்களின் விக்ஷேட குணாம்சங்களும் தெளிவாகப் புலப்படுகின்றன எனவும் காட்டுகின்றன. “மக்களின் உற்பத்தி” “தொழிலாளர் கொள்கைஎன்ற நோக்கு நிலைகளிலிருந்து விவசாயப் பண்ணை முறையை நிரோத்னிக்குகள் அங்கிகரித்த அதே வேளையில் நிலப்பிரபுத்துவ பண்ணை முறை விவசாய முதலாளித்துவத்துக்கான ஒரே வழி என அவர்கள் நம்பியதே நரோத்னிக் பொருளாதர வாதிகள் செய்த மாபெரும் தவறு. (இப்பொழுதும் கூட, இந்த நிலைப்பாடு துருதோவிக்குகள், பகழ் வாய்ந்த சோசலிஸ்டுக்கள் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.) இது தவறு என நாம் அறிவோம். நிலப்பிரபுத்துவப் பொருளாதாரம் முதலாளிய வழியில் பரிணமிக்கிறது; மேலும் படிப்படியாக உழைப்புக் குத்தகைக்குப் பதிலாக(Labour rent ) ”கட்டற்ற கூலி உழைப்பு” (Free wage Labour); தீவிர வேளாண்மை மூலம் “முப்போக முறையையும்”, பெரிய தனியார் பண்ணைகளில், காலங்கடந்த விவசாயக் கருவிகளுக்குப் பதிலாக, முன்னேறிய இயந்திரங்களைப் புகுத்துகிறது; விவசாயப் பண்ணை முறையும், முதலாளித்துவ வழியில் பரிணமித்து, கிராமப்புற முதலாளி, கிராமப்புறப் பாட்டாளி வர்க்கங்கள் எழ வாய்ப்பு அளிக்கின்றன. “கிரம சமூகத்தின்” முன்னேறிய நிலையும், பொதுவாக, கிராம விவசாயிகளின் செழிப்பான வாழ்க்கைத் தரமும், விவசாயிகளிடையே முதலாளிய விவசாயத்தின் பகை வர்க்கங்களைப் பிரித்து வேறுபடுத்தும் நிகழ்வு மிக வேகமாக நடைபெறுகிறது. இதன் விளைவாக எங்கெங்கும் இருவகைப் போக்கிலான விவசாயப் பரிணாம வளர்ச்சியை நாம் காண்கிறோம். சீர்த்திருத்தத்துக்கும் பிந்திய ருக்ஷ்யாவின் வரலாறு முழுவதின் கூடே சிவப்பு நூலிலை போல ஓடுகின்ற, உழவர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களுக்கிடையிலான மோதல், நமது புரட்சியின் மிக முக்கிய பொருளாதார அடித்தளமாக இருந்தது. இம்மோதல்  ஒன்று அல்லது வேறு வகைப்பட்ட முதலாளிய விவசாயப் பரிணாமத்திற்கான போராட்டமாகும்.
        இந்த இருவகைகளுக்கும் இடையேயான வேறுபாட்டையும் இவை இரண்டின் முதலாளியப் பண்பியல்பையும் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் தான, ருக்ஷ்யப் புரட்சியில், விவசாயப் பிரச்சனையை சரியாக விபரிக்க முடியும்; பல்வகையான கட்சிகள் முன்வைக்கும் பலவகையான விவசாயத் திட்டங்களின் வர்க்கக் குறிபொருளை (முக்கியத்துவத்தை) அறிய முடியும். “நிலப்பிரபுத்துவம்” பெரும் பண்ணை ஆட்சி நிலைதான் போராட்டத்தின் “சிழல் அச்சு” என  நாம் மீண்டும் கூறுவோம். இவை இரண்டின் முதலாளியப் பரிணாமம், அனைத்து வாக்கு வாதங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறது. ஆனாலும், சாத்தியமாக இருக்கிறது. விவசாயிகளால், புரட்சிகரமான முறையில், அவை ஒழிக்கப்படும்; நீக்கப்படும். அல்லது, அவை படிப்படியாக, ஜங்கர் பண்ணைகளாக மாற்றப்படும். (மேலும், இதன் பயனாக, அடிமை முழிக் (Muzhik) அடிமை நெக்ட் (Knecht) ஆக மாற்றப்படும்.
பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும்   
செயல் தந்திரமும் பற்றி- ஒரு தொகுப்பு           
லெனின், ஸ்டாலின், மாவோ பக்கம் 119 – 123்

No comments:

Post a Comment